தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 april 2014

இலங்கையில் விரைவில் நல்லிணக்கம் வேண்டும்- அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தியோரும் கைதாம்…

யாழ். பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பருத்தித்துறையைச் சேர்ந்த 5 மீனவர்களை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவிற்குக் கொண்டுசென்றனர். பத்திரிநாதன் ரெஜினோல்ட் (வயது 47), பத்திரிநாதன் வின்சன் பெனடிக் (வயது 38), செல்வராசா அன்ரன் இருதயராசா (வயது 32), அழகநாதன் வின்சன் மரியதாஸ் (வயது 45), நாகப்பு மிக்கல்பிள்ளை (வயது 53) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.எனினும் கடல்வழியாக ஆட்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பியமை தொடர்பினில் ஏற்கனவே முல்லைதீவினில் ஜவர் கைதாகியுள்ள நிலையினில் இவர்களும் கைதாகியிருப்பதாக நம்பப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/65076.html

இலங்கையில் விரைவில் நல்லிணக்கம் வேண்டும்- அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்வேறு விரும்பத் தகாத சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பிராந்தியத்திற்கு அதிகாரப் பகிர்வு, வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இராணுவத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை எனவும், சுயாதீன அடிப்படையில் யுத்த வலயங்களை பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் வழிகாட்டல் அடிப்படையில அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதகிள் குழுவினர் இலங்கையின் யுத்த வலயத்திற்கு விஜயம் செய்திருந்ததாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையை தனிமைப்படுத்தியோ தண்டனை விதித்தோ நல்லிணக்க முனைப்புக்களை மேற்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாறாக கூட்டு இணக்கப்பாடுகளின் மூலம் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வு காண முடியும் என அவர் சுட்டிக்;காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65080.html

Geen opmerkingen:

Een reactie posten