தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 april 2014

ராஜபக்ஷே ஆதரவாளர்கள் விழாவில் த்ரிஷா?

ஈழ தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷேவை கண்டிக்கும் விதமாக இலங்கைக்கு நடிகர் – நடிகைகள் போவதில்லை என முடிவு எடுத்துள்ளனர்.
அங்கு நடக்கும் இசை விழாக்களிலும் பங்கேற்காமல் பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதனை மீறி செல்வோருக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன.
இதுபோல் வெளிநாடுகளிலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகிறார்கள்.
ஆனால் நடிகை திரிஷா தடையை மீறி ராஜபக்சே ஆதரவாளர்கள் விழாவில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவில் இந்த விழா நடந்துள்ளது. அங்குள்ள தமிழர் அமைப்பு ஒன்று இந்த விழாவை நடத்தி உள்ளது.
இந்த அமைப்பில் இருப்பவர்கள் ராஜபக்சேவுக்கு நெருக்கமாக உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என மற்ற தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இவர்கள் நடத்திய விழாவில் த்ரிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளதை தொடர்ந்து அவரை தமிழ் அமைப்புகள் கண்டித்து உள்ளன.
http://www.newindianews.com/view.php?20oOl3dbcy40634e34MQ3022YmD3ddcfDmI30eM6AKae4A04A4cb3lOm23

Geen opmerkingen:

Een reactie posten