தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகின்றது!– ஜே.வி.பி - அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபடப் போவதில்லை!– எல்லாவல தேரர்

புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிப் போராளிகளை படையில் சேருமாறு இராணுவம் அழைப்பு!
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 04:30.29 PM GMT ]

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போராளிகளையும், ஒன்றுமே அறியாத இளைஞர்களையும் இலங்கை இராணுவத்தில் சேர்ப்பதற்காக இராணுவத்தினர் கிழக்கு மாகாணத்தில் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார்.
முன்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறி தற்போது தங்களது குடும்பங்களுடன் இணைந்திருக்கும் போராளிகளை அண்மைக்காலமாக இராணுவத்தில் சேருமாறு விடுக்கும் எச்சரிக்கை தொடர்பாக கருத்துக் கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணத்திலே அண்மையில் புலிப் பூச்சாண்டி காட்டிய அரசாங்கம் தற்போது அதனொரு பகுதியாக கிழக்கு மாகாணத்திலும் அவ்வாறானதொரு தோற்றப்பாட்டினை காட்டி மக்களை மீண்டும் மீண்டும் தமிழர்களை அச்சநிலைக்கு உட்படுத்தும் செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்திலே திருக்கோயில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சில இடங்களில் தமிழர்கள் மறுமமான முறையில் காணாமல் போயிருக்கின்றார்கள். அதன் பின்னரும் அப்பிரதேசத்தில் இருந்து கால்நடை வளர்ப்பிற்காகச் சென்றிருந்தவர்களை காட்டிற்குள் வைத்து கறுப்பு சீருடை அணிந்த ஆயுதம் தாங்கிய நால்வர் இவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து இவர்களை துன்புறுத்தியிருக்கின்றார்கள்.
அதன் பின்னர் அந்தப் பாதையினால் உளவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து இவர்கள் கூக்குரல் இட்டதன் மூலமே இவர்கள் அந்த இடத்தில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள் அதன் பின்னர் தக்கப்பட்டவர்கள் உடனடியாக திருக்கோயில் பிரதேச பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டினையும் செய்திருக்கின்றார்கள்.
இச்சம்பவம் நடந்த இடமானது முழுக்க முழுக்க இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான பிரதேசமாகும் இங்கு இந்த நாசகார வேலைகளை செய்பவர்கள் யார் என்பதனை இதுவரைக்கும் கண்டறியாமல் இருப்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
தமிழ் மக்கள் பல அழிவுகளைக் கண்டவர்கள் அதற்குள் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தியவர்கள் அந்த வலியினை உணர்ந்ததன் காரணமாக இனிமேலும் அந்த அழிவு என்ற பாதைக்குப் போகாமல் ஜனநாயக வழியிலே எமக்கான விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்றுதான் இன்று அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இதனை புரிந்து கொள்ளாத அரசாங்கமும், அரச புலனாய்வுப் பிரிவினரும் இந்த நாட்டிலே மேலும் ஒரு பிரச்சினை உருவெடுக்கப்போவதாக உலகிற்குக் காட்டுவதற்காக அவர்களினால் புனையப்பட்ட ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் நிமிர்த்தம் அந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் மிகவும் அச்ச நிலையிலேதான் தங்களது வாழ்நாளை கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
இராணுவத்தினரினால் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இருப்பவர்களையும் ஒன்றுமே தெரியாத அப்பாவி தமிழ் இளைஞர்களையும் இராணுவத்தில் சேருமாறு நிர்ப்பந்தித்து இருப்பதன்மூலம் இனியும் ஒரு இருண்ட யுகத்திற்கு எம்மினம் தள்ளப்பட்டு விடுமோ என்ற நிலைப்பாட்டினையும் இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான இந்த கசப்பான சம்பவங்களினால் பெரிதும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு வெந்த புண்ணில் வேலைப்பாச்சுவதைப்போல் இருப்பதாகவும் நோக்கவேண்டி இருக்கின்றது எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyETdLXnt1.html
அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருகின்றது!– ஜே.வி.பி - அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபடப் போவதில்லை!– எல்லாவல தேரர்
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 12:52.27 AM GMT ]
அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருவதாகவும், இனவாத அடிப்படையில் செயற்படும் தரப்பினருக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருவதாகவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
தேசத்தை கட்டியெழுப்பும் வரி என நுகர்வு பொருட்களுக்கு மூன்று வீத வரி அறவீடு செய்யப்படுகின்றது.
இதன் மூலம் அரசாங்கம் எந்தப் பக்கத்தில் தேசத்தை கட்டியெழுப்பியுள்ளது.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இனவாத அமைப்புக்களை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது.
வரிச்சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்
அன்றாடம் உணவு உட்கொள்ளவே முடியாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
அகழ்வாராய்ச்சிப் பணிகளில் ஈடுபடப் போவதில்லை – எல்லாவல மேதானந்தா தேரர்
எதிர்வரும் காலங்களில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபடப் போவதில்லை என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பெரும் மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளேன்
எனவே எதிர்வரும் காலங்களில் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுப்படப் போவதில்லை.
மிக முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாப்பதில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்துவதில்லை.
சகலவிதமான அகழ்வாராய்ச்சி பணிகளிலிருந்தும் விலகிக்கொள்கின்றேன்.
அகழ்வாராய்ச்சி பணிகளிலிருந்து விலகிக் கொள்வது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன் என மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள பௌத்த அடையாளங்களை உறுதி செய்வதில் எல்லாவல மேதானந்த தேரர் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சியில் முக்கிய பதவிகளை வகித்த இவர், சிங்கள பௌத்தர்களின் வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பிலான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnuz.html

Geen opmerkingen:

Een reactie posten