யாழ் வட்டுக்கோட்டையில் உள்ள சென்பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் கொலைசெய்யப்பட்டதை வேடிக்கை பார்த்த பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. வட்டுக்கோட்டை மற்றும் யாழ்பாணக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிகெட் போட்டியைப் பார்த்துக்கொண்டு இருந்த மாணவன் ஒருவர் மீது குண்டர்கள் சிலரும் மாணவர்கள் சிலரும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதனை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். குறிப்பிட்ட தாக்குதல் நடக்கும்வேளை இதனைப் பார்த்த 5 மாணவர்கள் அங்கிருந்த பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்கள். இருப்பினும் கடமையில் இருந்த அதிகாரி இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
இதன் காரணமாகவே அம்மாணவன் இறந்ததாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். இக் கொலையை வேடிக்கை பார்த்த பொலிசாரின் படம் இணைக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6626
Geen opmerkingen:
Een reactie posten