தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 april 2014

விடுதலைப் புலிகள் பக்கத்தை பார்க்கத் தவறிய அமெரிக்கப் பிரேரனை: பிரபலப் பத்திரிகை!

வில்பத்து சரணாலய பகுதியில் முஸ்லிம்கள் குடியேற்றம்: உடன் வெளியேற உத்தரவு

வில்பத்து வன விலங்குகள் சரணாலயம் மற்றும் வில்பத்து வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் அத்து மீறி குடியேறியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு வன வள பாதுகாப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. அப்படி வெளியேறா விட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வில்பத்து வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரதேசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து திணைக்கள அதிகாரிகள் இக்குடும்பங்கள் வில்பத்து வனவிலங்கு சரணாலயத்துக்கு சொந்தமான இடத்திலா அல்லது அதற்கு வெளியிலா குடியேறியுள்ளனர் என்பதைக் கண்டறிய கடந்த வாரம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது இக்குடும்பங்கள் சரணாலயத்துக்கும் வனவளப் பாதுகாப்பு பிரதேசத்திலும் குடியேறியிருப்பதாக தெரிய வந்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிள்ளையானும் மட்டு கலாச்சார சீரழிவைத் தடுக்கவாம்?? என்ன கொடுமை

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வருவது போன்று இங்குள்ள மக்களின் வாழ்கைத் தரமும் வளர்ச்சியடைய வேண்டும். பிரதேச மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய சுற்றுலாத்துறையை சமூகங்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டு சமூக, கலாசார சீரழிவையும் அனுமதிக்க முடியாது.இதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம்’ என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
‘கிழக்கு மாகாணத்தில் சுற்றூலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்யவும் உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் சித்திரை புத்தாண்டு வருடப்பிறப்பை சிறப்பிக்;கவுமாக பாரம்பரிய கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளை எதிர்வரும் 18ஆம் திகதியன்று கிழக்கின் உல்லாச புரியான பாசிக்குடா கடற்கரையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, பாசிக்குடா செந்தாரா சுற்றுலா விடுதியில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,
‘கடந்த காலத்தில் சுற்றுலாத்துறையானது கிழக்கில் மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் மூலம் சுற்றூலத்துறையை கிழக்கில் அபிவிருத்தி செய்தார்.
சுற்றுலாத்துறை இங்கு அபிவிருத்தி அடைந்து வருவது போன்று இங்குள்ள மக்களின் வாழ்கைத் தரமும் வளர்ச்சியடைய வேண்டும். பிரதேச மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய சுற்றுலாத்துறையை சமுகங்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டு சமூக, கலாசார சீரழிவையும் அனுமதிக்க முடியாது.இதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.
சுற்றுலாத் துறையானது கிழக்கில் 2014இல் அதிக வருமானத்தை ஈட்டித்தந்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம். எனவே எமது பிரதேசத்தில் உள்ள பாரம்பரிய மிக்க பிரபல்யமான இடங்களை உல்லாசப் பயணிகள் சென்று பார்வையிடும் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும்.
வருடம்தோறும் இந்நிகழ்வு கிழக்கில் இடம்பெற வேண்டும். இந்நிகழ்வுகளில் எமது மூவின மக்களுடன் வெளிநாட்டு உல்லாசப் பயனிகளும் பங்குபற்றுதல் வேண்டும்’ என்று அவர் மேலும் கூறினார்.
கடற்கரையோர விளையாட்டுக்களான நீச்சல் படகோட்டம், கரைப்பந்து, கால்ப்பந்து போன்றனவும் மரதன் ஓட்டம், கிடுகு பின்னுதல், சாயம் முட்டி உடைத்தல், தலையனைச்சமர் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாரம்பரிய உணவு விற்பனை, கலாச்சாரப் பேரணியென பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மேற்படி நிகழ்வுகள் யாவும் பாசிக்குடா கடற்கரையிலேயே இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்;கு கிழக்கில் வாழும் மூவின மக்களும் கலந்துகொள்வதற்கான அழைப்பினை கிழக்கு மாகாண சபை மற்றும் சுற்றுலாத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிகழ்வுகளில் உல்லாசப் பயணிகளும் கலந்துகொள்வார்கள். உள்ளுர் உற்பத்திகளை விற்பனை செய்யும் இடங்களும் அன்றைய தினம் இலவசமாக ஒதுக்கப்படும். இதற்க்கான வருமானவரி எதுவும் அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் பிரதேச கலாசார உத்தியோகஸ்த்தர்களுடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் மேலதிக விபரம் மற்றும் தொடர்புகளுக்கு கிழக்கு மாகாணசபை சுற்றுலாத்துறை பணிப்பாளர் க.கிருஷான் தொலைபேசி இலக்கம். 065 – 3063747, 077 – 4217917 உடன் தொடர்பு கொள்ளும்படி தகவல் விடுக்கப்பட்டுள்ளது.Valaichenai-TmvpValaichenai-Tmvp01

விடுதலைப் புலிகள் பக்கத்தை பார்க்கத் தவறிய அமெரிக்கப் பிரேரனை: பிரபலப் பத்திரிகை

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேவதைகளாக பார்க்கப்படவில்லை என்று, த ஏஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலியா முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி, த ஏஜ் பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரேரணையில் இரண்டு தரப்பினர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்துக்கு எதிரானதோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ அமையவில்லை.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போதிய விசாரணையை நடத்த தவறிய நிலையிலேயே சர்வதேச விசாரணையை கோரிய இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அந்த கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளதுThe-Age-A

Geen opmerkingen:

Een reactie posten