வெலிகந்தையில் உள்ள சித்திரவதை முகாமில், குறித்த அதிகாரியை அடைத்துவைத்து இலங்கை இராணுவம் அவரிடம் இருந்து சில தகவல்களைப் பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு சதித்திட்டம் அடங்கியுள்ளதா ? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதேவேளை இந்த வெளிநாட்டு சக்தியை காட்டிக்கொடுக்காமல் இருக்கவே, இந்த அதிகாரி இத்தாக்குதலை புலிகள் தான் திட்டமிட்டுள்ளார்கள் என்று திசைதிருப்பியுள்ளார் என்று, கைதிகள் ஊடாக வெளியான தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனையடுத்தே, சமீபத்தில் தாய்லாந்து, மலேசிய மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பிய தமிழர்களையும், முன் நாள் புலிகளையும் இலங்கை இராணுவம் தேட ஆரம்பித்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது.
இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும், இந்த காஸ் சிலிண்டர் குண்டு சமீபத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இக் குண்டு மிகவும் சக்திவாய்ந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறும் இராணுவம் குண்டு துளைக்காத கண்ணாடியைக் கூட இக் குண்டு, உடைக்கும் திறண் கொண்டது என்று கூறியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6620
Geen opmerkingen:
Een reactie posten