தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 april 2014

424 தமிழர்களை தடை செய்ததில் இறந்தவர்களும் உள்ளடக்கம்! இலங்கையரசின் புதிய காமடி

இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய 424 நபர்கள் என்றொரு அறிவித்தலை கடந்த மார்ச் மாதம் 21 ம் திகதி வர்த்தமானியில் இலங்கை அரசு வெளியிட்டிருந்தது. நபர்களின் முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் கடவுச்சீட்டு இலக்கம் என்பவையும் அதில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த பட்டியலின் 11 ம் பக்கத்தில் குறித்ததொரு நபர் குறித்த விபரங்களுள்ளன: கருணாநிதி துரைரத்தினம் அல்லது துரை, தொ.பே. இல :-0664656395, கடவுச் சீட்டு இல :கு 750320938 ,பிறந்த திகதி:-05.03.1969, விலாசம் (இலங்கை) :வட்டு மேற்கு, வட்டுக்கோட்டை. விலாசம் (வெளிநாடு) :- 14, ரூ மயுரைஸ் பியுரோ, 93000 – பொபினி.பட்டியலிடப்பட்ட திகதி: 2014 பெப்புரவரி 25. ஆனால் மேலே பெயர் குறிப்படப்பட்டுள்ள கருணாநிதி துரைரத்தினம் கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் திகதி மரணமடைந்துள்ளார் என்பதும். அவரது மரணஅறிவித்தல் மற்றும் கண்ணீர் அஞ்சலி இணையங்களில் உலாவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/64507.html

Geen opmerkingen:

Een reactie posten