ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளது.புத்திஜீவிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தன.யுத்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக தீர்மானத்தினால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பில் கவனம் n;சலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் கட்டமாக புத்திஜீவிகளுடன் தீர்மானம் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் இந்த சந்திப்புக்களை நடாத்த உள்ளனர். |
Geen opmerkingen:
Een reactie posten