தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

ஐ.நாவின் யோசனையே 16 தமிழ் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: பாலித கோஹன

த.தே.கூட்டமைப்பை தடை செய்யப்பட வேண்டியது கட்டாயம்: ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 08:32.16 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்டாயம் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆயுத அமைப்பொன்று தோற்கடிக்கப்பட்ட பின்னர், அதன் அரசியல் பிரிவை தடை செய்யாத உலகில் ஒரே நாடு இலங்கை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவாக செயற்பட்டுள்ளது.
அதனை தடை செய்யாத காரணத்தினால், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களின் மனைவிமார் மக்கள் பிரதிநிதிகளாக செயற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnv7.html
ஐ.நாவின் யோசனையே 16 தமிழ் அமைப்புக்களின் தடைக்கு காரணம்: பாலித கோஹன
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 03:29.49 AM GMT ]
பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் உள்ள 16 பிரிவினைவாதத்துக்கு உதவும் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அரச பத்திகைக்கு தகவல் அளித்துள்ள அவர், அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய யோசனையின் அடிப்படையிலேயே இந்த தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த தடையின்கீழ், மேற்கத்தைய நாடுகளில் திறந்த நிலையில் செயற்படும் குறித்த அமைப்புக்கள் இலங்கையுடன் மறைமுகமாக தொடர்புகளை கொண்டிருப்பதுவும் தடுக்கப்படும் என்று கோஹன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள கோஹன, ஒரு பிரிவினரின் கருத்துக்களுக்காக நாட்டின் எதிர்காலத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnu6.html

Geen opmerkingen:

Een reactie posten