[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 10:29.58 AM GMT ]
இது குறித்து தெரியவருவதாவது
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் நேற்று மதியம் 12.00 மணியளவில் வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணை அந்த வழியால் ஆட்டோவில் வந்த இருவர் வழிமறித்து ஒருவரின் முகவரியை விசாரித்துள்ளார்கள்.
அம்முகவரி தனக்குத் தெரியாது எனக் கூறிவிட்டு செல்ல முற்பட்ட போது அப்பெண்ணை தமது ஆட்டோவில் வருமாறு வற்புறுத்தி, கெட்ட தூசண வார்த்தைகளால் ஏசிக்கொண்டு அப்பெண்ணை பலவந்தமாக அவர்கள் வந்த ஆட்டோவில் ஏற்ற முற்பட்டுள்ளனர்.
அப்போது திகைப்படைந்த அந்த இளம் பெண் கூக்குரலிட்டு கத்தியுள்ளார். கத்தும் சத்தம் கேட்டு அயலவர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றதனை அவதானித்த கடத்தல்காரர்கள் இருவரும், தாம் வந்த ஆட்டோவில் ஏறி வேகமாகத் தப்பித்துச் சென்றுவிட்டார்கள்.
இதனால் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அச்சமும் பதட்டமும் நிலவியது.
கிளிநொச்சியில் வீதிக்கு வீதி இராணுவம் காணப்படுகின்ற போதிலும் களவுகளும், கடத்தல் முயற்சிகளும் இடம்பெறுகின்றமை மக்கள் மத்தியில் குழப்பத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnw3.html
தமிழில் அறிக்கையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 10:38.16 AM GMT ]
குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வேலுப்பிள்ளை யோகநாதன் என்பவர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரிகின்றார். இவர் கடந்த 08.04.2014 ஆம் திகதி இரவு தனது கடமையின் நிமித்தம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
அப்போது தான் அங்கு வந்ததற்காக அதற்கான புத்தகமொன்றில் தமிழில் அறிக்கை இட்டிருக்கிறார்.இந்நிலையில், குறித்த பகுதிக்கு பொறுப்பாக இருந்த சிங்கள பொலிஸ் அதிகாரி ஒருவர் தனக்கு தமிழ் தெரியாதெனவும் இதனால் சிங்களத்தில் அறிக்கை இடுமாறும் பணித்திருக்கிறார்.
அப்போது தனக்கு சிங்களம் தெரியாதென யோகநாதன் கூறியபோது, குறித்த விடயத்தை அவதானித்துக் கொண்டிருந்த உவைஸ் (முஸ்லிம்) என்ற பொலிஸ் பரிசோதகர் திடீரென எழுந்து அருகில் இருந்த பொல்லை எடுத்து யோகநாதனை தாக்கி இருக்கிறார்.
இதனால் காயமடைந்த யோகநாதன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த சம்பவம் தொடர்பாக யோகநாதனின் முறைப்பாட்டை உரிய முறையில் பதிவு செய்யாத பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அரைகுறையான சிங்களத்தில் முறைப்பாடொன்றினை பதிந்துவிட்டு கையொப்பமிடுமாறு பணிக்கப்பட்டிருக்கிறார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடத்தில் முறைப்பாடு செய்தும் உவைஸ் என்ற பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லையென தாக்குதலுக்குள்ளான பொலிஸ் அதிகாரியான யோகநான் கூறுகின்றார்.
குறித்த பொலிஸ் பரிசோதகரான உவைஸ் என்பவர் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றியபோது, அங்கு பல வன்முறைகளுடனும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளிலும் தொடர்பு கொண்டு செயற்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyE
இலங்கை “மிகவும் அவதானமான நாடு” : பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 11:35.32 AM GMT ]
மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆண்டு தோறும் வெளியிடப்படும் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை நிலைமைகள் முன்னேற்றமில்லை.
போரின் பின்னர் புனரமைப்பு, உட்கட்டுமான அபிவிருத்தி, தேர்தல் நடத்துதல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், ஊடகவியலாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.
மனித உரிமை நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தும் நாடுகளின் வரிசையில் இலங்கை இணைக்கப்பட வேண்டும்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் உன்னிப்பாக கவனிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களிலும் மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றம் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை “மிகவும் அவதானமான நாடு”- பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கை
இலங்கை அவதானமான நாடு” என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் அந்த வகுதிக்குள் இலங்கை அடக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2013 ஆம் ஆண்டு அனைத்துலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இலங்கை மிகவும் அவதானமான நாடு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போருக்கு பின்னர் புனர்நிர்மாணப் பணிகளில் முன்னேற்றம் தொடர்கின்ற போதிலும் பல நிலைகளில் நாடு பின்னடைவை கண்டுள்ளது.
செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றமை தொடர்கின்றது. பெண்களுக்கான உரிமைகள் தொடர்பில் இலங்கை காத்திரமான பங்கை செலுத்தவில்லை.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையானது கலாசார உரிமைகளை அவதானத்துக்கு உட்படுத்தியது.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை, இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு மற்றும் போரின் பின் நல்லிணக்கம் என்பவற்றை எதிர்ப்பார்த்திருக்கிறது.
அத்துடன் பெண்களுக்கான உரிமை, சுயாதீன தேர்தல் போன்ற அம்சங்களிலும் பிரித்தானியா தொடர்ந்தும் கவனம் செலுத்தும் அதேநேரம், பிரித்தானிய பிரஜை குராம் ஷேக் கொலை தொடர்பில் இலங்கையில் நீதித்துறை முன்னேற்றகரமாக செயற்படுவதாக பிரித்தானிய மனித உரிமைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESULXnw7.html
Geen opmerkingen:
Een reactie posten