தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juli 2013

பெரிய விமானங்களில் பந்தாவாக வெளிநாடு சென்று கடன் பெறும் ஜனாதிபதி: அனுரகுமார திஸாநாயக்க

யாழில் 47 வயதில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பித்த நபர்
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 09:59.10 AM GMT ]
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவர் முதல் முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெற விண்ணப்பித்துள்ளார் என கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் - நல்லூர் - கோண்டாவில், ஸ்டேசன் வீதியில் சேர்ந்த சிவபாத சுப்ரமணியம். என்பவரே இவ்வாறு தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பித்துள்ளார்.
கடந்த 23ம் திகதி யாழ். நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் நடத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவையில் சிவபாத சுப்ரமணியம் இந்த விண்ணப்பத்தை கையளித்துள்ளார்.
கஃபே இயக்கம், மனித உரிமைகளுக்கான கேந்திரம் மற்றும் ஆட்பதிவு திணைக்களம் என்பன இணைந்து அடையாள அட்டை மற்றும் வேறு அடையாள ஆவணங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த நடமாடும் சேவையை ஏற்பாடு செய்திருந்தன.

பெரிய விமானங்களில் பந்தாவாக வெளிநாடு சென்று கடன் பெறும் ஜனாதிபதி: அனுரகுமார திஸாநாயக்க
[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 10:30.44 AM GMT ]
நாட்டின் பலத்தை காண்பிப்பதற்காக நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் பெரிய விமானங்களில் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம், ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் கடனுதவியை பெறுவதற்காக இவ்வாறு பெரிய விமானங்களில் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வெலிகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அண்மையில் எயர் லங்கா நிறுவனத்திற்கு சொந்தமான பெரிய விமானத்தை ஒதுக்கி அதில் பந்தாவாக சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார். பலத்தை காட்டுவதற்காக அல்ல அந்த நாட்டிடம் கடனை பெறுவதற்காக சென்றார்.
மத்தல விமான நிலையத்தில் எத்தனை விமானங்கள் வந்து செல்கின்றன என்று நாங்கள் நாடாளுமன்றத்தில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன விடம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு பதிலளித்த அவர், முதல் நாளில் 4 விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. இரண்டு விமானங்கள் தரையிறங்கியது. மறு நாள் இரண்டு விமான புறப்பட்டுச் சென்றன. ஒரு விமானம் இறங்கியது என்றார்.
எமது கிராமத்தில் இருக்கும் பஸ் நிலையங்களில் கூட இதனை விட அதிகமாக பஸ்கள் வந்து போகின்றன.
நான் அறிந்த வரையில், யானைகள் உட்செல்ல முடியாதபடி வேலி அமைக்கப்பட்டிருக்கும் ஒரே விமான நிலையம் மத்தல விமான நிலையமாகும்.
இதற்கும் விளம்பரம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. யானைகளின் அச்சுறுத்தல், மயில்களின் நடனம் மற்றும் குருவிகளின் சத்தங்களுடன் விமானத்தில் பயணம் செய்ய வாருங்கள் என அதில் கூறப்பட்டிருந்தது.
ஏன் 04 ஆயிரம் கோடி ரூபாவை செலவிட்டு விமான நிலையம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். பண்டாரநாயக்க பெயரில் விமான நிலையம் இருப்பது போல், தனது பெயரில் விமான நிலையம் இருக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக மகிந்த இந்த விமான நிலையத்தை நிர்மாணித்தார் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten