யாழில் அரைநிர்வாணமாக உல்லாசம் அனுபவித்த வெளிநாட்டு ஜோடி கைது-வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் உடனடியாக நிறுத்தவும்: பொலிஸ்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 07:18.38 AM GMT ]
வெளிநாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவில் வந்த சுவிஸ் நாட்டுப் பிரஜைகளான இருவரும், யாழ் கோட்டைப் பகுதியில் அரை நிர்வாண கோணத்தில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த படகு விபத்தில் தனது பிள்ளையை பறிகொடுத்த இலங்கையைச் சேர்ந்த தமிழருடன் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பொது இடத்தில் அநாகரியமான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கணவன்-மனைவி எனக் குறிப்பிடுகின்ற வேளை அதனை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இவர்களிடம் இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்ளவும் - யாழ்.பொலிஸார் அறிவுரை
யாழ் குடாநாட்டில் வரையரையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கொடுப்போர் தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதினால் அதிகரித்த முறைப்பாடுகள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படுகின்றது.
இந்த அதிகரித்த மீற்றர் வட்டியால் நாளாந்தம் யாழ்.மக்கள், வர்த்தகர்கள் பெரும் பாதிப்படைந்து வருவது மட்டுமல்லாது இதுவரை யாழ்ப்பாணத்தில் வட்டிக்கொடுமையினால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என யாழ்.பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
எனவே எதற்கும் ஒரு வரையறை உள்ள போது இந்த மீற்றர் வட்டிக்கு ஏன் ஒரு வரையறை இல்லாமல் போனது. இதனால் மக்கள் தமது வீடுவாசல்களையும், நகைகளையும், வாகனங்களையும், கடைகளையும், வட்டிக்காரர்களிடம் தினம் தினம் இழந்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வட்டி தொழிலாளர்களுக்கும் பணமுதலைகளுக்கும் நெருக்கிய ஒரு தொடர்பு உள்ளதை மக்கள் அறிந்ததே எனவே மீற்றர்வட்டிக்கு கொடுப்பவர்களின் கவனத்திற்கு ஒன்றை கொண்டு வர விரும்புகின்றோம்.
உடனடியாக யாழ். சமூகத்தின் நன்மை கருதி மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமாறும் ஒரு மனிதாபமான முறையில் வட்டிக்கு வேண்டுமானால் கொடுத்துக் கொண்டு வரையான அதிகரித்த வட்டியை உடன் நிறுத்தா விட்டால் சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்
படகு கவிழ்ந்து பலியான இலங்கை சிறுவனின் தந்தைக்கு கெவின் ரூட் இரங்கல்
[ வெள்ளிக்கிழமை, 26 யூலை 2013, 08:41.44 AM GMT ]
ஜாவா தீவு அருகே நிகழ்ந்த படகு விபத்தில் பலியான 13 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காணாமற்போயுள்ளனர்.
இந்த விபத்தில் தனது 3 வயது குழந்தையான பரணீதன் பாலமாறனை இழந்த நடராசா பாலமாறன் அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த இவர், பேர்த்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவியையும், குழந்தையையும், சட்ட ரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க முயன்றபோது, அந்தக் கோரிக்கை அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை இந்தோனேசியாவில் இருந்து படகு மூலம் அழைக்க நடவடிக்கை எடுத்திருந்தார்.
படகு விபத்தில் குழந்தை மரணமானதால், கவலையில் ஆழ்ந்துள்ள நடராசா பாலமாறன், தனது குழந்தையின் உடலைத் தேடுவதற்கு பேர்த்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடிச் சென்றிருந்த போதே, அவுஸ்திரேலிய பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten