[ புதன்கிழமை, 03 யூலை 2013, 09:40.11 AM GMT ]
துப்பாக்கி தயாரிக்கும் நிலையத்தில் இருந்து, தயாரித்து முடிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள், இரண்டு ரவைக் கூடுகள் மற்றும் வெடிமருந்துகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் யஸ்வந் குமார் சிங்ஹா நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அங்கிருந்த ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோத்தபாயவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்- புதிய உயர்ஸ்தானிகர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்கள் கையளிப்பு
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 09:26.32 AM GMT ]
அண்மையில் பதவியேற்று கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதை நிலைமைகள் மற்றும் இரண்டு நாடுகளும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
புதிய உயர்ஸ்தானிகர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நியமனக் கடிதங்கள் கையளிப்பு
இலங்கைக்கான புதிய வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் இருவர், தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஷேலி விட்டின்ங் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரான யஸ்வந் குமார் சிங்ஹா ஆகியோர் தங்களது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி இன்று செயலகத்தில் நடைபெற்றது.
Geen opmerkingen:
Een reactie posten