தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 april 2013

தஞ்சம் கோருவோரினால் அவுஸ்திரேலியாவுக்கு நெருக்கடி!- ஆஸி.க்கான அமெரிக்க தூதுவர் !


அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோரின் நிலைமை துயரமாக இருந்த போதிலும், அது ஒரு வகையில் நல்ல நெருக்கடியாகவே உள்ளதாக அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி பிலிய்ச் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா தற்போது முகம்கொடுத்துள்ள பிரச்சினை குறித்து அமெரிக்க தெளிவு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா தமது ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்ற போது தஞ்சம் கோருவோரின் பிரச்சினை மிக நெருக்கடியாக இருந்தாக அமெரிக்க தூதுவர் ஜெப்ரி பிலிய்ச் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் ஸ்கை நியுஸ் செய்தியாளருக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தமது இரண்டு நாடுகளும் திறந்த சமூக நிலைமையை கொண்டுள்ளதன் காரணமாக இந்த பிரச்சினையை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுதவிர, அவுஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நாடுகள் தமது எல்லைப்பாதுகாப்பு குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி பிலிய்ச் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரோனி அபபோட் அதிருப்தி
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் எல்லைப் பாதுகாப்பு குறித்து அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரோனி அபபோட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
66 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பகல் வேளையில் அவுஸ்திரேலிய கரையை சென்றடைந்திருந்தமை தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு விவகாரங்களில் கட்டுப்பாட்டை தற்போதைய அரசாங்கம் கிரமமாக இழந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னரைப் போன்று அல்லாது அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளதாகக் ரோனி அபபோட் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் அபபோர்ட்டின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmryESVNanu2.html

Geen opmerkingen:

Een reactie posten