யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பின்னணியில் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க செயற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சிவில் உடையணிந்த அதிகாரிகள் செயற்படுகின்றனர்.
இவர்கள் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்பட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் தாம் கலந்து கொண்ட கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவ முகாமிற்கே சென்றனர்.
பொலிஸாரின் கடமைகளை எவ்வாறு இராணுவத்தினர் மேற்கொள்ள முடியும்.
சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்ததனைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten