தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 april 2013

இந்தியாவின் மாதிரியை ஒத்த அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட வேண்டும்: ஆனந்தசங்கரி


தென்னிந்திய திரைப்படங்களை தடை செய்யக் கூடாது!– மாலினி பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 02:21.07 AM GMT ]
தென்னிந்திய திரைப்படங்களை தடை செய்யக் கூடாது என பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களைப் போன்று நாமும் தென் இந்திய திரைப்படங்களை விரும்பி ரசிக்கின்றோம்.
தென்னிந்திய கலைஞர்களின் ஆற்றலை நாம் பாராட்டுகின்றோம்.
தென்னிந்திய திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்யை நாம் முன்வைக்கவில்லை.
குறிப்பிட்ட ஓர் தரப்பினரின் கருத்து நாட்டில் உள்ள அனைத்து பௌத்த பிக்குகளின் கருத்தாக அமையாது.
இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதற்கு தமிழக திரைப்படங்களை தடை செய்யவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் திரைப்படங்களை தடை செய்வதனால் இந்தியாவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சனல்4 காணொளி தொடர்பில் இராணுவம் விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 02:22.03 AM GMT ]
சனல்4  காணொளி தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை நடாத்தவுள்ளனர். ஆறு பேரைக் கொண்ட விசேட குழுவொன்று இந்த காணொளியின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடாத்தவுள்ளது.
மேஜர் ஜெனரல் டபிள்யு.ஜே. சில்வா, ஏ.கே.எஸ்.பெரேரா, பிரிகேடியர்களான ஜே.குலதுங்க, ஆர்.ஏ. சில்வா, எஸ்.விஜேவிக்ரம மற்றும் லெப்டினன் கேணல் எச்.எம். ஹேரத் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜெர்மனிய ஊடக நிறுவனமொன்றும், நோர்வே ஊடகவியலாளர் ஒருவரும் இந்த காட்சிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளுக்காக இந்த வீடியோ காட்சிகளை வழங்க சனல்4  ஊடகம் விரும்பவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ நீதிமன்றின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 02:47.58 AM GMT ]
இராவணுத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த இராணுவ நீதிமன்றத்தின் அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை இராணுவத்தினர் குழு ஒன்றை நியமித்து அறிக்கை ஒன்றை தயாரித்து, அதனை அண்மையில் பாதுகாப்பு செயலாளரிடம் கையளித்திருந்தது.
இதில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரின் தாக்குதல்களால் ஒரு பொது மகனேனும் கொல்லப்படவில்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட போர்க்குற்றங்களை நிறுத்த சர்வதேச நாடுகள் தவறிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனினும் இந்த அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் போலியானது என்று தாங்களாலேயே நியமிக்கப்பட்ட குழுவினரால் இராணுவம் அறிக்கை தாக்கல் செய்துள்ளமை நகைச்சுவையானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள்: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 03:04.22 AM GMT ]
அமெரிக்காவின் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஆசிய பசுபிக் திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க சம்மதித்த நிலையிலேயே இந்த விஜயம் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியாளர்களிடம் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்காவின் ஆசிய பசுபிக் திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.
இது இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


உள்நாட்டு ரீதியான அரசியல் தீர்வே பொருத்தமானது!- டியூ குணசேகர
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 03:11.49 AM GMT ]
இலங்கைக்கான அரசியல் தீர்வை, இலங்கையே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டியூ குணசேகர வலியுறுத்தியுள்ளார்.
திகன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமே இறுதி அரசியல் தீர்வினைப் முன்வைக்க வேண்டும். மாறாக சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் அழுத்தங்களை கொடுக்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விடயங்களில் அழுத்தங்களை பிரயோகித்து, அவர்களுக்கு ஏற்றாற் போல் தீர்வினை இலங்கை மீது திணிக்கும் அதிகாரம், சர்வதேச நாடுகளுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மாதிரியை ஒத்த அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்பட வேண்டும்: ஆனந்தசங்கரி
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 03:14.14 AM GMT ]
இந்தியாவின் மாதிரியை ஒத்ததான தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் அவர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையை இரண்டாக பிரிக்கும் தீர்மானத்தை ஏற்க முடியாது. அதற்கு இந்தியாவும் இடமளிக்காது.
இந்தியாவின் மாநிலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அகதிகாரங்களே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசியல்வாதிகளால் தங்களின் அதிகாரங்களையும் மீறி, இலங்கையில் தனி ஈழம் கோருவது நியாயமில்லை.
எனினும் இந்தியாவின் மாநிலங்களை ஒத்த தீர்வு ஒன்றே இலங்கைக்கு பொறுத்தமானதாக இருக்கும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் அரசாங்கத்துடனும் பேசவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten