தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 april 2013

இந்திய எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்! முதற்கட்டமாக 2000 தொழிலாளர்களை வெளியேற்றுகிறது இலங்கை!


இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவில் வலுப்பெற்று வலும் நிலையில் கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை  இலங்கை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர்.
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக இலங்கை தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இவர்களுக்குப் பதிலாக இலங்கை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக அவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொழிலாளர்கள் இங்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதாகவும், அவர்கள் விரைவிலேயே சிங்களத்தை கற்றுக் கொள்வதாகவும் அவர் புகழ்ந்துள்ளார்.
எனினும் இந்தியத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றவே, இலங்கை பணியாளர்களைப் பயிற்றுவிக்குமாறு இலங்கை அரசாங்கம் கொழும்பு டொக்யார்ட நிறுவனத்தைக் கோரவுள்ளதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்புத் துறைமுக பொதி இறக்கும் பணியாளர் சங்கத்தின் தலைவர் அண்மையில் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கொழும்புத் துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனா மேற்கொள்ளவுள்ள நிலையில், கொழும்புத் துறைமுகப் பகுதியில் செயற்படும் டொக்யார்ட்டில் இருந்து இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பயணிகள் கப்பல்கள், வணிகக் கப்பல்கள், கடற்படைக்கான ரோந்துக் கப்பல்கள் போன்றவை கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten