தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

'மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்' - மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் அமெரிக்கா!!


பேருந்தும் ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து: 20க்கும் அதிகமானோர் படுங்காயம்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 03:47.22 PM GMT ]
கடலோர புகையிரத மார்க்கத்தின் மக்கொனைக்கும் பேருவளைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள மாகல்கந்த எனும் இடத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும் ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் 20க்கும் அதிகமானோர் படுங்காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில், கண்டியிலிருந்து இறுதிக்கிரிகை ஒன்றுக்காக பேருந்தில் பயணித்தவர்களே ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் மட்டு.தமிழ் வலயக் கல்விப் பணிப்பாளர்களை அனுமதிக்க முடியாது!- கல்வி மேம்பாட்டு ஒன்றியம் கண்டனம்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 03:31.10 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அரசாங்க அரசியல் வாதிகளின் ஆதரவைப்பெறும் நோக்கில் நீதிக்கு புறம்பாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமிழ் தேசியத்தைச் சிதைப்பதில் கங்கணம் கட்டி அலைகின்றனர்.
இதனை தமிழ் சமூகம் என்ற வகையில் நாம் அனுமதிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட கல்வி மேன்பாட்டு ஒன்றியம் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுவதாவது,
மட்டக்களப்பு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளராக உள்ள எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா என்பவர் “கருணா” என அழைக்கப்படும் பிரதியமைச்சர் முரளிதரனின் கையாளாவார். இவர் கருணாவின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை குறைக்கும் வகையிலும், செயற்பட்டு வருகின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் என அறியும் அதிபர், ஆசிரியர்களை எப்படியாவது தூர இடங்களுக்கு இடமாற்றுவது அவர்களை பழிவாங்குவது போன்ற செயற்பாடுகளில் இறங்கியுள்ளார்.
அதிபர், ஆசிரியர்கள் இடமாற்ற சபையில் கருணா இணைப்பாளர், அசிரியர்கள் உட்பட கருணாவின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடியவர்களை நியமித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற செங்கலடி இரட்டைக் கொலை சார்பாக செங்கலடி பாடசாலை மாணவர்கள் இதன் சார்பாக செங்கலடி பாடசாலை மாணவர்கள் இதன் சந்தேகத்தர்களாக கைதாகியுள்ள நிலையில் செங்கலடி அதிபர், ஆசிரியர்கள் தமக்கும் தமது கருணாவுக்கு ஆதரவு இல்லை என்ற வகையில் அவர்களை விசாரிக்க வேண்டும், இடமாற்ற வேண்டும் என துடிக்கின்றார்.
ஒழுக்கம் பற்றி கதைக்கும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தமது வலயக் கல்வி திணைக்கள அதிபர் ஒன்று கூடலில் தமக்கு எதிராக யாராவது கதைத்தாளோ அல்லது தமது செயற்பாடுகளை விமர்ச்சித்தாலோ அவர்களை அறைக்குள் பூட்டி வைத்து அடிப்பேன் என அதிபர்கள் ஒன்றுகூடலில் அண்மையில் தெரிவித்தமை “கருணா”வின் பழைய நடவடிக்கையை இவர் கையில் எடுத்ததை காட்டுகின்றது.
அரசியல்வாதியாக மாறி செயற்படும் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர், அண்மையில் சந்திவெளி பாடசாலையில் நடைபெற்ற ஆயிரம் பாடசாலை ஸ்தாபிப்பு விழாவில் பிரதியமைச்சர் முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்வில் கருணாவை மிகவும் புகழ்ந்து பேசியதுடன், இவர் புலிகள் இயக்கத்தை காட்டிக் கொடுத்து விலகி வந்தததை பாராட்டியுள்ளார்.
இவ்வாறானவர்கள் எவ்வாறு கல்விப் புலத்தில் ஒரு நேர்மையான வலயக் கல்விப் பணிப்பாளராக செயற்படமுடியும். ஆனால் ஏதோ தான் புதிதாக வந்து சாதிப்பதாக கூறுகின்றார்.
இந்த விழாவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுக்கக்கூடாது என அதிபர்களுக்கு எச்சரித்துள்ளார். இவர்கள் கூறும் எந்தவிடயத்திலும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.
இவரின் நடவடிக்கையை மிகவும் அவதானமாக கற்றோர் அமைப்புக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வேளை பிள்ளையான் மாகாண சபை உறுப்பினர் இதனை அறிந்து இவரை வெருட்டியதனால் தற்போது அதிபர்கள், ஆசிரியர்கள் இடமாற்றங்கள் சார்பாக சென்றால் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேசிய அமைப்பாளர் பஞ்சலிங்கம் ரமேஷ் என்பவரிடம் கேட்டு அனுமதி பெற்றே இவ்விடமாற்றம் சார்பாக நடவடிக்கை எடுக்கின்றார்.
இதற்கு காரணம் இவரது நடவடிக்கை சார்பாக பிள்ளையானின் முக்கிய கையாளான மட்.வின்சன்ட் பாடசாலை அதிபராக இருந்து தற்போது கல்குடா வலய பிரதி கல்விப் பணிப்பாளராக இருக்கும் சுஜாத்தா குலேந்திரகுமார் பிள்ளையானின் கையாளாக தொடர்ந்து செயற்படுவதால் வலயக் கல்விப் பணிப்பாளர் கருணா சார்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பிள்ளையானுக்கு அடிக்கடி தெரியப்படுத்தி வருகின்றார்.
இவ்வேளை முன்பு கல்குடா கல்வி வலயத்தில் மாகாண சபை உறுப்பினர் பிள்ளையானை கடவுளாக போற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி தற்போது மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக உள்ளார். இவரும் தற்போது தமது இடமாற்றம் உட்பட பாடசாலைகளின் எந்த நடவடிக்கையாவும் முன்னாள் முதலமைச்சராக இருந்து தற்போதைய மாகாண சபை உறுப்பினராக உள்ள பிள்ளையானை தான் எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடமும், அதிபர்களிடமும் கூறியுள்ளதுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் விடயத்தில் பாடசாலைகளில் அழைப்பதை தவிர்க்குமாறும் அதிபர்களுக்கு கூறியுள்ளார்.
இவ்வேளை மட்டக்களப்பு பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தியநாதன் என்பவர் கருணாவின் இணைப்பாளரும், அதிபரும், தற்போது கல்குடா இடமாற்ற சபையில் உள்ளவரும், முன்பு வெற்றிலையில் பாராளுமன்ற தேர்தல் கேட்டு தோல்வி கண்டவருமான சத்தியவரதனின் அண்ணாவுமாவார்.
இவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எதற்கும் அழைக்கக்கூடாது. கருணாவையே அழைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார். சுபா சக்கரவர்த்தி நடவடிக்கை சார்பாக கருணாவுக்கு தகவல் வழங்கும் பணியையும் புரிகின்றார்.
மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக களுதாவளையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் உள்ளார். இவர் களுதாவளை பிள்ளையார் ஆலய தலைவராக இருந்தவர். தேர்தல் காலத்தில் வெற்றிலையில் குறித்த கணேசமூர்த்தியை வெற்றிபெறச் செய்ய பிரசாரம் செய்தவர். தற்போது பிள்ளையானின் இடது கைபோன்று செயற்படுகின்றார்.
பிள்ளையானையும், அரசாங்க அரசியல் வாதிகளையும் மாத்திரமே பாடசாலைக்கு அழைக்க வேண்டும். கூட்டமைப்பின் அதிபர், ஆசிரியர்களை பழிவாங்க வேண்டும் என்ற அளவில் துடித்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கு பின்னால் தமிழினத் துரோகிகள் சிலர் பின்னியாக உள்ளனர். என்ன விடயம் செய்வதென்றாலும் பிள்ளையானுடன் கதைத்து முடிவுபெற்றே மேற்கொள்கின்றார்.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக கடமைபுரியும் ந.புள்ளநாயகம் என்னும் துறைநீலாவணை பெண்மணி மாகாண சபை உறுப்பினர் பிள்ளையானின் வலது கை ஆகும். இவர் நீண்ட காலமாக பிள்ளையானின் முக்கியஸ்தராக செயற்பட்டு வருகின்றார்.
கடந்த பிள்ளையானின் மகாநாட்டில் பெண்கள் தலைவராக இவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஒரு வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்தும் தான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பிரதிநிதி என்பதை வெளிக்காட்ட இவர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மகாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சகல அதிபர்இ ஆசிரியர்களை கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். புள்ளநாயகத்தை நெறிப்படுத்துபவர் பட்டிருப்பு வலய கோட்டக் கல்வி அதிகாரி பாலச்சந்திரன் என்பவர்.இவர் சில இடங்களில் கூறியுள்ளார். புள்ளைநாயகத்துக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது நான் தான் அவருக்கு ஆலோசனை கூறுவேன். எனது ஆலோசனையில் செயற்படுவர் புள்ளநாயகத்தை பெரிதாக புழுகினால் போதும் என கூறியுள்ளார்.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிபர், ஆசிரியர்கள், அதிபர்களை வழிவாங்குவதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார். இவர்களை தூர இடத்திற்கு இடமாற்றம் செய்தல். அவர்களை கஷ்ரப்படுத்தல் உட்பட்ட பல நடவடிக்கைகளை இவரால் மேற்கொள்ளப்படுகின்றது.
இவருக்கு துதியாகும் பாலச்சந்திரன் சாதாரண தர பரீட்சை நடைபெறும் போது இதற்கு பொறுப்பாக இருந்து கொண்டு வெளியில் சென்று மதுபானம் பாவித்து விட்டு வந்து கல்வி நடவடிக்கையில் ஒழுங்கீனமாக செயற்பட்டார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜாவின் மச்சான் ஆவார். இவர் பொன்.செல்வராஜாவின் கதையை வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா நடவடிக்கையை பிழையாக விமர்சித்து திரிபவர். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட வலய தமிழ் கல்விப் பணிப்பாளர் செயற்படுவது யாவரும் அறிந்த விடயமாகும்.
இவ்வேளை இவர்களது நடவடிக்கைகள் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள். மாகாண சபை உறுப்பினர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தமிழ்த் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் போது எம் தமிழ் இனத்தின் துரோகிகளை இவர்கள் எம் தமிழ் சமூகம் ஒதுக்க வேண்டும். தமிழ் கூட்டமைப்பினர் எவ்வேளையிலும் இவர்களை தொடர்ந்து பதவிகளில் வைக்கவோ, உயர் பதவிகளை வழங்கவோ கூடாது. இவர்களது துரோகத்தனங்களை எமது தமிழ் சமூகத்துக்கு தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும் என தமிழ் மக்கள் சார்பாக எங்கள் அமைப்பு தமிழ் கூட்டமைப்பை கேட்டுக் கொள்கின்றோம்.
ஏனெனின் மிகவிரைவாக ஒரு தீர்வு தமிழ் கூட்டமைப்பிடம் திணிக்கப்படும். இவ்வேளை இவ் வலயக் கல்வி பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் எம் வடக்கு கிழக்கு மண்ணில் கடமையாற்றவோ, உயர் பதவிகளை பெறவோ இடமளிக்கக்கூடாது என அன்பான கோருவதாக இவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டி உள்ளனர்.அரசியல் மயமாகியுள்ள மட்டக்களப்பு தமிழ் வலயக் கல்விப் பணிப்பாளர்கள்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அரசாங்க அரசியல் வாதிகளின் ஆதரவைப்பெறும் நோக்கில் நீதிக்கு புறம்பாக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட கல்வி மேன்பாட்டு ஒன்றியம் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

'மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்' - மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் அமெரிக்கா
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 10:43.02 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012ம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் இலங்கை அரசாங்கம் இருப்பதாக தனது முக்கிய அம்சங்களின் தொகுப்பின் ஆரம்பத்திலேயே கூறியுள்ள அந்த அறிக்கை, ஜனாதிபதி, நாடாளுமன்றம் மற்றும் உள்ளூர் தேர்தல்கள் அங்கு பிரச்சினைகள் நிறைந்தவையாக இருந்ததாக சுயாதீன பார்வையாளர்கள் குறிப்பிடுவதாகக் கூறியுள்ளது.
தேர்தலிகளில் முக்கிய கட்சிகள் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாகவும், ஆளும் கட்சி அரச நிறுவனங்களையும், ஏனைய வளங்களையும் அதற்கு பயன்படுத்துவதாகவும் அது கூறியுள்ளது.
பொதுமக்கள் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகப் பார்க்கப்படுபவர்கள் மற்றும் செய்தியாளர்கள் தாக்குதலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதாகவும் அது கூறுகின்றது.
இதனால், செய்தியாளர்கள் சுயதணிக்கை செய்து கொள்வதாகவும், பலர் பலவந்தமாக காணாமல் போகும் நிலைக்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அரச படைகள் சித்திரவதைகள் போன்றவற்றில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக தமிழ் பகுதிகளில் பல துணைப்படைகள் மனித உரிமை மீறல்கல்களில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டத்துக்கு விரோதமான கைதுகளும், தடுத்து வைப்புக்களும், அளவுக்கு அதிகமான நீண்ட கால விசாரணைக்கு முன்பான தடுத்து வைப்புக்களும் பெரும் பிரச்சினையாக அங்கு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு நியாயமான விசாரணைகள் மறுக்கப்படுவது இன்னமும் ஒரு பிரச்சினையாக இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நீதித்துறையின் சுதந்திரமும் அங்கு கேள்விக்குள்ளாகி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் குடிமக்களின் அந்தரங்க உரிமைகளை மீறுவதாகவும், பேச்சு, ஊடகம், பொது இடங்களில் கூடுதல் மற்றும் நடமாட்டம் ஆகியவற்றில் கட்டுப்பாடு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
பொதுமக்கள் பொதுவாக எங்கும் சென்று வரக்கூடிய நிலைமை இருந்தாலும், வடக்கு பகுதியில் சில இரானுவ சோதனைச் சாவடிகள் இன்னமும் தொடர்வதாகவும், உயர்பாதுகாப்பு வலயங்கள் பொதுமக்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
18 வது திருத்தச் சட்டத்தின் மூலம் முன்னர் சுயாதீனமான பொது நிறுவனங்களாக திகழ்ந்தவற்றின் நியமன அதிகாரம் ஜனாதிபதியின் கைகளுக்குள் வந்திருக்கிறது.
இவற்றில் பொலிஸ், நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் அடங்குகின்றன.
பெண்களுக்கு எதிரான வன்செயல்களும், பாரபட்சமும் பிரச்சினையாக இருக்கின்றன.
சிறார் துஷ்பிரயோகம், ஆட்களை கடத்துவது ஆகியனவும் தொடர்கின்றன.
வலது குறைந்தவர்கள் மற்றும் சிறுபான்மை தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமும் தொடர்கிறது.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் தமிழர்களின் எண்ணிக்கை அவர்களது மொத்த சனத்தொகைக்கு பொருத்தமற்றதாக மிக அதிகமாக காணப்படுகிறது.
ஒருவரது பாலியல் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் மீது பாரபட்சம் காட்டப்படுவதும், எச் ஐ வி தொற்று ஏற்பட்டவர்களுக்கு எதிரான பாரபட்சமும் காணப்படுகிறது.
தொழிலாளர் மற்றும் சிறார் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுவதும் பிரச்சினையாக தொடர்கிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மிகச் சிலர் மீதே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால், 2009ம் ஆண்டில் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற சர்வதேச மனித நேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் தொடர்பில் எவரையும் பொறுப்புக் கூறுச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten