[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:31.55 PM GMT ]
1990ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கே இவ்வாறு காணி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையினரால் காயமடைந்த காரைக்கால் மீனவர்களுக்கு புதுவை அரசின் நிவாரணம் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்டு சிறையிலிருப்போருக்காக வழங்க முன்வந்த நிவாரணத்தை மீனவ குடும்பத்தார் பெற மறுத்துவிட்டனர்.
மன்னார் மாவட்டத்தின் அரச காணிகளும் காட்டுப் பிரதேசங்களும் இவ்வாறு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட உள்ளன. வட மாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியும், சுற்றாடல் அமைச்சும் கூட்டாக இணைந்து இந்த காணி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளன.
எதிர்வரும் ஜுன் மாதமளவில் இந்த காணி வழங்கும் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற மறுப்பு!
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 03:08.23 PM GMT ]
காரைக்கால் பகுதி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அண்மையில் நடந்தன.
இவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு காரைக்காலை சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் புதுவை முதல்வர் என். ரங்கசாமியை வலியுறுத்தினர்.
காயமடைந்த மீனவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், சிறையிலிருக்கும் மீனவக் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
இதற்கான தொகை வழங்கும் நிகழ்ச்சி மீன்வளத்துறை சார்பில் கிளிஞ்சல்மேடு கிராமத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 12-ம் தேதி மீன்பிடிக்க சென்ற கிளிஞ்சல்மேடு, காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்த ராஜூ, ரமேஷ், வேதநாயகம், செல்வம், வீரபாபு, சத்தியநாதன், வீரப்பன் ஆகியோருக்கு தலா ரூ.15 ஆயிரத்தை, குடும்பத்தாரிடம் நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி வேளாண் அமைச்சர் மு.சந்திரகாசு, பேரவை உறுப்பினரும், காரைக்கால் வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுமத் தலைவருமான வி.எம்.சி.சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநர் என்.இளையபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிவாரணத்தை பெற மீனவர்களின் குடும்பத்தினர் மறுப்பு:
அண்மையில் இலங்கை கடற்படையினரால் 26 பேர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வரும் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
இந்த தொகையும் இந்த நிகழ்ச்சியில் வழங்குவதாக இருந்தது.
ஆனால் சிறையிலிருக்கும் குடும்பத்தார் யாரும் இதனை வாங்க மறுத்துவிட்டனர்.
தங்களுக்கு சிறையிலிருப்போரை விடுவிக்க புதுவை அரசும், மத்திய அரசும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வந்த பிறகே அரசின் நிவ்ராணத்தை பெற்றுக் கொள்வோம் என தெரிவித்து விட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten