தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 april 2013

செங்கலடி தம்பதிகள் படுகொலை! அபயக்குரல் எழுப்பினேன் அயலவர் எவருமே வரவில்லை! பெண்ணின் தந்தை சாட்சியம் !


மட்டக்களப்பு- செங்கலடி பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் பிரபல வர்த்தகரான சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் வீட்டு அறையொன்றில் கோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
இச்சம்பவம் குறித்த நீதிமன்ற விசாரணைகள் நேற்று முன்தினம் புதன்கிழமை மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி கே. கருணாகரன் முன்னிலையில் மஜிஸ்திரேட் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது குடும்ப உறவினர்களது சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டன.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை பொன்னுத்துரை சுந்தரமூர்த்தி சாட்சியமளிக்கையில்,
சம்பவம் தினம் நள்ளிரவு வேளையில் அடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து முன்னால் இருந்த மகளின் வீட்டைப் பார்த்தேன். ஆள் அலறும் சத்தமும் வந்தது. உடனே குசினிப் பக்கம் சென்றேன். கதவுகள் மூடிய நிலையிலேயே இருந்தன. யன்னல் ஊடாக படுக்கையறையைப் பார்த்தேன். மருமகனுக்கு ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான்.
மின் விளக்கு எரிந்த போதிலும் யன்னலின் சிறிய துவாரத்தினால் அங்கு அடித்துக் கொண்டிருந்த நபரை அடையாளங்காண முடியவில்லை. நான் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினேன்.
அப்படியிருக்க கதவு மூடும் பொல் தடியொன்று விழும் சத்தம் கேட்டது. அதையடுத்து ஒரு நபர் ஓடிச் செல்வதை காணமுடிந்தது.
நான் மகளின் வீட்டிற்குச் சென்று ‘தம்பி தம்பி’ என்று மருமகனைக் கூப்பிட்டேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பின்னர் மகள், மகள் கூவியழைத்தேன். பதில் எதுவும் இல்லை.
அப்படியிருக்க அவ்வீட்டில் உறங்கிய பேத்தி எழுந்து வந்து கூப்பிட்டாள். நான் சத்தமிட்டு குசினிப்பக்க கதவைத் திறக்கச் சொன்னேன். திறந்து ‘என்ன அம்மப்பா’ என்று கேட்டாள். ‘ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை’ என்று கூறிவிட்டு மகளின் படுக்கையறைக்குச் சென்றேன்.
அங்கு மகளும் மருமகனும் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தவர்களை அழைத்தேன். எவரும் எழுந்து வரவில்லை. முன்னால் உள்ள ஆஸ்பத்திரிக்குச் சென்று நிலைமையைக் கூறினேன். அங்கு பொலிஸாருக்கு அறிவிக்கும்படி தெரிவித்தார்கள்.
ஓடோடிச் சென்று செங்கலடி சந்தியில் கடமையிலிருந்த பொலிஸாரிடம் சம்பவத்தை கூறினேன். விரைந்து வந்து பார்த்தார்கள் என்றார்.
மட்டக்களப்பு- செங்கலடி இரட்டைக் கொலை தொடர்பாக கொல்லப்பட்டவர்களின் மகள் தக்ஷனா (வயது 16)  மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில்,
கடந்த 7ந் திகதியன்று மாலை 4.30 மணியளவில் அப்பா, அம்மா, அக்கா அனைவரும் உடுப்பு எடுக்க கடைக்குச் சென்று அன்றிரவு வீட்டிற்கு வந்தோம்.
அக்கா அம்மம்மாவின் வீட்டில் உறங்கச் சென்றார். எங்கள் அம்மா அக்காவுக்கு இரவுச் சாப்பாட்டிற்காக மீன் கறி எடுத்துச் சென்றார். அக்கா கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு ‘கறி கசக்கிறது’ என்றார். அதற்கு அம்மா உனக்கு இதுதான் கத’ என்றார்.
அதன் பின்னர் அப்பாவும் அக்கறியை சாப்பிட்டுப் பார்த்து விட்டு ‘ஓம் கசக்கிறது தான்’ என்றதும் அக்கறியை, வீசிவிட்டோம்’ அதன் பிறகு அம்மம்மாவின் வீட்டில் சமைத்த ஆட்டிறைச்சிக் கறியை சாப்பிட்டோம.
அத்தினம் நள்ளிரவு வேளையில் அலறல் சத்தம் கேட்டது. நுளம்பு வலைக்குள்ளிருந்தவாறு அம்மாவைக் கூப்பிட்டேன்.
அப்போது வாசலில் நின்று அம்மப்பா என்னைக் கூப்பிட்டு குசினிக் கதவை திறக்குமாறு கேட்டார், திறந்தேன் அதன் பின்னர் படுக்கையறையை அவதானித்தேன். அம்மா கட்டிலிலும் அப்பா நிலத்திலும் இரத்த வெள்ளத்தில் இறந்து காணப்பட்டனர் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten