யாழ்., அரியாலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் தரமற்றவையாக உள்ளதாகவும் கூரைகளினூடாக மழை நீர் ஒழுகுவதால் வீட்டுக்குள் குடை பிடித்துக்கொண்டே வாழ வேண்டிய நிர்க்கதியான நிலை காணப்படுவதாகவும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அரியாலை மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரியாலைக்கு விஜயம் செய்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் குறை நிறைகள் குறித்துக் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளதாவது,
நீங்கள் கட்டித்தந்த வீடுகளின் அத்திவாரங்களிலும் சுவர்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்திவார வெடிப்புகளுக்குள் இருந்து மரங்கள் வளர்கின்றன. கூரை வழியாக மழை நீர் ஒழுகுகின்றது. இதனால் நாங்கள் வீடுகளுக்குள் குடை பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.
மக்கள் தம்முடைய குறைகளை தெரிவிக்கும் போது குறுக்கிட்ட யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இவ்வாறு தெரிவிக்க வேண்டாம் என அம்மக்களைத் தடுத்தார்.
இதன்போது இந்திய துணைத் தூதுவர் வெ. மகாலிங்கம் மாநகர முதல்வரைத் தடுத்து மக்களின் குறைகளை சுதந்திரமாக தெரிவிப்பதற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten