தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 april 2013

சவூதியில் இலங்கைப் பணிப் பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்!!


இலங்கையர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்புகளை வழங்க சவுதி அரசாங்கம் இணக்கம்
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 02:46.57 PM GMT ]
சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்புகளை வழங்க சவுதி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பணிமனை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பல்வேறு தேவைகளுக்காக சவுதி சென்ற நிலையில், நாடு திரும்பாமல் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அங்கு தங்கியுள்ளனர்.
அவர்களை மீண்டும் இலக்கைக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
எனினும் இந்த பணிகள் நிறைவடையும் வரையில் அவர்களுக்கு தற்காலிக தொழில்வாய்ப்புகளை வழங்க சவுதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவூதியில் இலங்கைப் பணிப் பெண் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 04:05.22 AM GMT ]
சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டு எஜமானியும் அவரது பிள்ளைகளும் இணைந்து குறித்த இலங்கைப் பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி, செல்லிடப் பேசி மூலம் படமெடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் வீட்டு எஜமான் குறித்த பெண்ணை, பிரம்பால் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.
சித்திரவதைகளை தாங்க முடியாத குறித்த பெண், அந்நாட்டு பொலிஸில் முறைப்பாடு செய்து நாடு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தற்போது காலி காராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலி கந்துகொட லுனுவேல்வத்த என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

http://www.tamilwin.net/show-RUmryESbNalx1.html

Geen opmerkingen:

Een reactie posten