விடுதலைப் புலிகளின் ஆரம்பகால போராட்ட காலங்களிலும் கூர்மையடைந்த காலங்களிலும் களமுனைகளில் வீரியம் ஊட்டியவர்கள் என்றால் சாதாரண குடி மக்கள் என்றால் மிகையாகாது இதனை விடுதலைப் புலிகளின் தலைமை பல முறைகளில் உணர்ந்ததுடன் மட்டுமல்லாது சில சந்தர்ப்பங்களில் கூறியுமுள்ளதை கடந்த காலங்கள் மிகவும் வெளிப்படையாக காட்டுகின்றன.
இவ்வாறான நிலையில் வட-கிழக்கில் தமிழரின் போராட்டத்தில் போராடத் துணிந்தெல்லாம் சாதாரண சாமாணிய குடிகள் உயர் குடி வர்க்கம் தமது பண பலத்தால் தம்மைக் காத்தது தான் வரலாறு இதில் தவறுகள் சகலர் பக்கமும் உள்ளது அதை இவ்விடத்தில் வாசகர்கள் உணரும் வாய்புள்ளதை நாம் அறிகிறோம்.
இவைகள் இவ்வாறிறுக்க ஈழ விடுதலைப் போராட்டம் கூர்மையடைய புலம் பெயர் உறவுகளின் பண உதவி மிகையாகாது ஆனாலும் அவை இன்றைய நிலையில் பயணற்றதாகவே உணரப்படுகிறது காரணம் இன்று தாம் புலிகளின் போராட்டத்திற்கு பல மிலிலியன் பண உதவி செய்ததாக மார்பு தட்டும் பலர் இன்று என்ன செய்கிறார்கள் அன்றைய போராட்டத்திற்கு வலிமை சேர்த்த எத்தனை உள்ளங்கள் இன்று அங்கவீனரான நிலையில் அவர்களை பாற்க மனம் இல்லாதவர்கள் அன்று செய்த உதவி என்ன பயன்!
அன்றைய போராட்டம் உக்கிரம் அடைந்த காலத்தில் பணம் வசுலித்த எத்தனை தனி நபர்கள் இன்று மாட மாளிகை, செகுசு வாகனம் என உல்லாசம் அனுபவிக்கும் பலர் ஒரு நிமிடம் எனும் போராடி வலிகளுடன் வாடும் உள்ளங்களை நினைத்ததுன்டா அல்லது சிந்தித்ததுன்டா இல்லை மாறாக களவாடிய பணத்தில் புதிதாக எதை வாங்கலாம் என சிந்திக்கும் நாட்கள் தான் அதிகம் புலிகட்காக பணம் வசுலித்த கனிசமான வெளிநாட்டவாகள் இன்று பணத்தை பதுக்கி வைத்துள்ள விபரங்கள் எம்மிடம் 70 வீதமானவை ஆதாரங்களுடன் உள்ளன முழுமையடைந்ததும் வாசகர்களின் பார்வைக்கு விடுவது உறுதி தலைவர் வருவார் வந்தபின் தருவேம் எனும் ஒரு கூட்டம் நாம் யாருக்கு கணக்கு காட்ட வேண்டும் எல்லாம் அனுப்பிவிட்டேம் என தமாசடிக்கும் மற்றய கூட்டம் இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் நாடகம்
வெளிநாடுகளில் குடும்பங்களில் வரும் மங்களகர நிகழ்வுகளைக் கொண்டாடுவது வழமை அதனை யாரும் குறை கூறவும் முடியாது ஆனால் ஒரு நிகழ்விற்கு இலங்கைப் பணம் ஜந்து லட்சம் பத்து லட்சம் செலவு என மார்பு தட்டும் வெளிநாட்டுக் காரர்களில் நூற்றில் ஓரு வீதம் தான் தமது மகிழ்ச்சியில் ஈழத்தின் மகிழ்சிசியையும் இணைக்கிறது. ஏனையவை எல்லாம் குடி கும்மாளம் கூத்து என்பதுடன் விளம்பரத்திற்காக மாவீரர் தினமும் மற்றய பல தமிழர் உணர்வு சார்ந்த நிகழ்வுகளையும் நடாத்துகிறார்கள் செல்கிறார்கள் உண்மை உணர்வுடன் உள்ளவன் அன்றைய நாள் செல்வதற்து முன் அன் நாளை உருவாக்க காரண கர்தாவாக இருந்தவனை சிந்தையில் நிறுத்துவான்
வெளிநாடுகளில் மாவீரர் தினத்தில் உணர்வுடன் பங்கு பற்றும் வீதம் நூற்றில் பத்து வீதம் எந்த சுய நலமும் இல்லாமல் களமாடி விழி மூடியவர்களை நினைக்கும் நாட்களில் மண்டபம் சென்றவுடன் காதலனை காதலி தேடுவதும், நீண்ட நாள் காணாத நண்பர்களை மற்றை நண்பர்க் தேடுவதும், படம் பிடிப்பதும், குடிப்பதும், புகைப்பதும் தான் மீதம் இதை தவித்து ஒட்டு மொத்த தமிழனும் உணர்வுடன் செல்வதாக கூறட்டும் இல்லை
தமிழர் தயகத்தின் இறுதி மாவீரர் தின உரையில் புலிகளின் தலைமை புலம் பெயர் மக்களிடம் இம் மாபெரும் போராட்டத்தை ஓப்படைக்கிறேன் என்றதன் அர்த்தம் நினைவு தினங்களும் தமிழர் எழுச்சிகளும் அல்ல ஈழத்தின் வலிகளையும் ஆற்றும் பக்குவம் வெளிநாட்டு இளையவர்களிடம் உள்ளது என்பது மட்டுமே அவரது கருத்து இதை விடுத்து ஒவ்வெரு தளபதிக்கும் நினைவு தினம் விளையாட்டுப் போட்டி அதில் வரும் பணம் இறுதியில் கணக்கு முடியாமை எனும் பதில் இதில் வரும் பணத்தை சுயமாக ஈழத்தின் பக்கம் பாருங்கள்.
தினமது உளைத்து ஓய்வின்றி உள்ளவனுக்கு ஓய்வு அவசியம் அது மட்டுமல்ல தாய் மண் செல்வது அதனிலும் பிரதானம் இனி வரும் நாட்களில் வெளிநாட்டவர்கள் ஈழம் செல்வது பற்றி சிந்திப்பதும் மற்றும் பலர் தயார்படுத்துவதும் வழமை இவ்வாறு செல்பவர்களில் எத்தனை போர் யுத்தத்தால் பாதிப்புற்ற அல்லது ஏழ்மையானவர்களை சென்று பாற்பது நலம் விசாரிப்பது உதவுவது அவர்கள் அருகில் செல்வதற்கே சங்கடப்படுவது எத்தனை போர் கண்டால் மறைவது எத்தனை போர் இவர்கள் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வெடித்தால் வெளிநாடுளில் விசில் அடித்து குடித்து கும்மாளம் அடிக்கத்தான் முடியுமே தவிர போராடுவது முன்னர் பாதிக்கப் பட்டவர்கள் தான் என்பது மட்டும் உண்மை.
இவ்வாறான சூழலில் மடிப் பச்சை கேட்கும் இழி நிலையில் வாழும் முன்னால் போராளிகள் பொது மக்கள் குழந்தைகள் எம் உடன் பிறப்புக்கள் என்பதனை நினைப்போம் அவர்கள் எம் குடும்பத்தில் ஒருத்தன் அல்லது ஒருத்தி என நினைப்போம் கடந்த காலங்களில் வசந்தமான எம் காலங்களை சுயநலத்துடன் கழித்திருந்தால் இனிவரும் காலங்களில் ஈழத்தின் வாழும் உள்ளங்களை நிந்தையல் நிறுத்தி தாயக நினைவு நாட்களை புனிதத்துடன் பார்த்து வீட்டிற்கு ஒரு ஈழ மகனை அல்லது மகளை இன்றே இணைத்து தமிழன் என்பதன் அர்த்தத்தை உணரும் வரலாற்றுத் தருணமிது.
JVP இணையம்
Geen opmerkingen:
Een reactie posten