தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 april 2013

வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்!!


யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடியவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 08:51.09 AM GMT ]
யாழில் நீர் இறைக்கும் இயந்திரங்களைத் திருடிய குற்றச்சாட்டில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்தார்.
யாழ்.நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள விவசாயக் காணிகளில் வயலுக்கு இறைப்பதற்காக பொருத்தப்பட்டு இருந்த 10 மேற்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்களையே இவர் திருடியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாளை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராட்சி மேலும் தெரிவித்தார்.

வன்னிப் போரில் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும்!- வவுனியா வைத்தியசாலையில் இராணுவச் சிப்பாய் அட்டகாசம்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 03:08.45 PM GMT ]
வன்னியில் நடைபெற்ற போரில் தமிழர்களை கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும் என பொது மக்கள் மத்தியில் மிக மோசமாக சிங்கள இனவாதத்தைக் கக்கிய இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்தியர் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
விடுமுறையிலுள்ள கே.ஆர்.டி.பண்டார (வயது 24)  என்ற இச்சிப்பாய் மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய போது அவரது வாகனம் மகாகச்சகொடி என்ற இடத்தில் விபத்திற்குள்ளாகியது.
இதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட அவர் மாலை 5.30 மணியளவில் தமிழர்களை மிகக் கேவலமாக சிங்களத்தில் ஏசியவாறு பெண்களின் கழிப்பறைக்குள் செல்ல முயற்சித்துள்ளார்.
அவரைத் தடுப்பதற்கு முயன்ற சிற்றூழியரை அவர் அடித்துக் காயப்படுத்தியதோடு, வைத்தியர் சிங்களவரா? தமிழரா? என்று கேட்டு வைத்தியரையும் மேலும் பலரையும் தாக்கியுள்ளார்.
இத்தாக்குதலில் மூவர் காயமடைந்தனர்.
இதன்போது வன்னியில் தமிழர்களைக் கொன்றது போல எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டும் என்று என்று கொச்சைத் தமிழிலும் சிங்களத்திலும் கத்தியுள்ளார்.
இதன் பின்னர் இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த சிப்பாய்க்கு பாதுகாப்பு அளித்து வருவதோடு தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Geen opmerkingen:

Een reactie posten