அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலை புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களில 12,000 பேர் இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களில் 11,500 பேர் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேரின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சுகததாச விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளில், தேசிய மட்ட குறி பார்த்து சுடும் போட்டியில் 3 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்” என்றார். இலங்கை தேசிய விளையாட்டு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முன்னாள் விடுதலைப் புலிகளின் பெயர்கள், கனகசுந்தரம் ராஜீவன், தயாபரன் தவேந்திரன், செல்லமுத்து சுரேஷ்குமார்.
இலங்கை தேசிய விளையாட்டு அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 முன்னாள் விடுதலைப் புலிகளும், சென்னையில் வரும் ஜூலை மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த 20த் ஆசிஅன் ஆத்லெடிc Cகம்பிஒன்ஷிப் போட்டிகளில் துப்பாக்கி குறி பார்த்து சுடும் போட்டிகளில் கலந்து கொள்ளவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஒருபுறம் இருக்க, தமிழக அரசின் அறிவிப்பு குண்டு தூக்கிப் போட்டுள்ளது. இந்தப் போட்டியை சென்னையில் நடந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதி மறுத்துள்ளார். காரணம் போட்டிகளில் இலங்கை அணியினர் கலந்து கொள்கிறார்கள் என்பதால் தான் ! ஆனால் புலிகளும் இதனால் சென்னையில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten