[ பி.பி.சி ]
‘’பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு’’ என்னும் பேஸ்புக் குழு ஒன்றின் உறுப்பினர்களை பொலிஸார் கலைத்ததாகவும், பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்கள் அச்சுறுத்தியதாகவும், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட முஹமட் ஹிஸான் என்பவர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் கொள்கைகள் பௌத்த கொள்கைகளுக்கு முரணானது என்றும் கூறும் குழுவினர், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே தாம் பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்துக்கு முன்பாக இந்த நிகழ்வை நடத்த முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அமைதி எதிர்ப்பு நடவடிக்கையினை ஆரம்பித்து சிறிது நேரத்தில் அங்கு வந்த பொலிஸார் தம்மை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு மிரட்டியதாகவும், அவர்கள் தம்மில் சிலரிடம் விசாரணை அறிக்கையைப் பெற்றதாகவும் முஹமட் ஹிஸான் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அங்கு சில பிக்குமாரின் தலைமையில் வந்த கும்பல் ஒன்று தமக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தம்மை தாக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten