தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 april 2013

மாத்தளையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிதேவை: பிரபல தொல்பொருள் ஆராட்சியாளர் !



மாத்தளையில் போனவருடம் முதல் பல மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான இந்த எலும்புக்கூடுகள் தொடர்பாக நீதியான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பிரபல தொல்பொருள் ஆராட்சியாளர் ராஜ் சோமதேவ வேண்டுகோள் விடுத்துள்ளார். சுமார் 1986ம் ஆண்டு தொடக்கம் 1990ம் இடையிலான காலப்பகுதியில் தான் இவை புதைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இக் காலப்பகுதியில் ஜேவியின் கிளர்ச்சி காணப்பட்டது. இதனை அடக்க இலங்கை அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுமார் 30,000 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் இதில் காணமல் போயிருந்தார்கள்.

அவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் அனைவரையும் இலங்கை அரசு கொன்று புதைத்துள்ளதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது. இப் புதைகுழி விவகாரத்தால் சிங்களவர்களிடையே பெரும் சலசலப்பு தோன்றியுள்ளது. இதனை மகிந்தரின் அரசு மூடி மறைக்க எத்தணிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் , ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் தான் இக் கொலைகள் இடம்பெற்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


Geen opmerkingen:

Een reactie posten