அன்றைய தினம் 6 லட்சம் தமிழர்களும் ரணிலுக்கு வாக்களித்திருந்தால், ரணில் தான் இப்போது ஜனாதிபதியாக அமர்ந்திருப்பார். அது வேறுவிடையம். ஆனால் புலிகள் அப்படிச் செய்யவில்லை. காரணம் ரணில் அரசே கருணாவைப் பிரித்தது என்று அவர்கள் திடமாக நம்பினார்கள். அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் ரணில் ஆட்சிக்கு வந்தால் பெரும் பாதிப்பு நிகழலாம் என்றும் அவர்கள் கருதினார்கள். இதனாலேயே தமிழர்களை மெளனம் காக்குமாறு அன்று புலிகள் அறிவித்தார்கள். அபோது தோற்றுப்போன ரணில் இதுவரை மீண்டு எழவில்லை. ஆனால் அவர் மட்டக்களப்பு பகுதியில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் சமீபத்தில் உரையாற்றும்போது, தனது வெறுப்பை புலிகள் மீது காட்டினார். தாம் ஜனாதிபதியாக முடியவில்லை என்ற ஆதங்கத்தை அவர் அங்கே வெளிப்படுத்தியதோடு என்றுவிடவில்லை.
தேசிய தலைவர் பிரபாகரனை ஏற்றிச்செல்லவந்த கப்பல் எங்கே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இலங்கை அரசு பதில்செல்ல முடியுமா என்றும் அவர் மேடையில் பேசும் போது கூறியுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது.
Geen opmerkingen:
Een reactie posten