தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

அதிரும் தகவல்கள்: 80% தமான இலங்கை கடற்படையினர் இந்தியாவில் பயிற்சிபெற்றனர் !


இலங்கையில் உள்ள கடற்படையினரில் சுமார் 80 வீதமானவர்கள், ஏதோ ஒரு வகையில் இந்தியாவில் பயிச்சி எடுத்தவர்கள் என்று ஜயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையின் கமாண்டர் ஜயந்த மேலும் தெரிவிக்கையில், இவர்கள் கேரளாவிலும் மற்றும் நீலகிரியிலும் தமது பயிற்சிகளை முடித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் 250 இலங்கை கடற்படையினர் இந்தியாவுக்கு பயிற்ச்சிக்காக செல்லவுள்ளார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா கோரளாவிலும் மற்றும் நீலகிரியில் வைத்தும் இலங்கை கடற்படையினருக்கு பாரிய அளவில் பயிற்ச்சிகளை வழங்கிவருகிறது.

இச் செய்திகளானது அவ்வப்போது அரசல் புரசலாக வெளியே வந்தாலும், இவ்வளவு தொகையான படையினருக்கு எவ்வாறு இந்தியா பயிற்சிகளை வழங்கியது என்று பல வாயைப் பிழக்கிறார்கள். இச் செய்தியை இந்திய நாழேடும் உறுதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Geen opmerkingen:

Een reactie posten