தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 april 2013

டுபாயிலுள்ள இலங்கையர் 19 பேருக்கும் வேறு நாடுகளில் புகலிடம்?


ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 19 பேருக்கும் வேறு நாடுகளில் புகலிடம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் சட்டவிரோத இலங்கை குடியேற்றவாசிகளை ஏற்றிய படகொன்று சர்வதேச கடற்பரபபில் அனர்த்தத்திற்குள்ளாகியது.
இதனையடுத்து சிஙகப்பூருக்கு சொந்தமான கப்பலொன்றின் ஊடாக அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
அதன் பின்னர் அவர்கள் டுபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த விசாரணைகளின் பின்னர் அந்தக் குழுவில் இருந்த 19 பேர் தவிர்ந்த ஏனையோர் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டதுடன் எஞ்சியவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.
அவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்ற அதேவேளை குடியேற்றவாசிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அலுவலக ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அகதி அந்தஸ்த்து உறுதி செய்யப்படாத 19 பேரில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடக பேச்சாளர் இளந்திரையனின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவதாக த டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten