[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 03:12.25 PM GMT ]
தேசிய கத்தோலிக்க நிலையத்தின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய சிறில் காமினி பெர்னாண்டோ இது குறித்து கருத்துரைக்கையில்ää இது கர்தினாலின் உறவினர் விடயமாகையால் கர்தினாலே பதில் கூறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்
இந்த விடயம் தொடர்பில் கர்தினாலிடம் அனுமதியை பெற்று அல்லது அவரின் செயலாளருடன் தொடர்புகொண்டு வினவுமாறு ஊடகம் ஒன்றிடம் சிறில் காமினி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே மணிலாவில் கர்தினாலின் மருமகள் பதவி ஒன்றை பெற்றிருந்ததாகவும், தற்போது பிரான்ஸில் பதவி ஒன்றில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கு அமைவாகவே பாப்பரசரை தேர்தல் சூழ்நிலைக்குள்ளும் இலங்கைக்கு அழைத்து வர கர்தினால் ஜனாதிபதிக்கு உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkp4.html
தோல்வியின் பின்னர் பதவியை உடனடியாக விட்டுக் கொடுக்க வேண்டும்!- எதிரணி கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 03:28.48 PM GMT ]
இந்தநிலையில் ஜனாதிபதிக்கு உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் எதிரணி உறுதியளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்
தேர்தல் தினத்தன்றோ அல்லது அதற்கு பின்னரோ நாடாளுமன்றத்தை கலைக்கும் செயற்பாடானது அரசாங்கத்தின் தற்கொலைக்கு ஒப்பான செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் வெற்றியால் ஆளும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவே அவர்களும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை தரவேண்டும் என்று சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஊழல்கள் தொடர்பாக வெளியிடப்படவுள்ள நூலை தேடி, ஸ்ரீகோத்தாவிலும் தமது சொந்த வீட்டிலும் இரகசிய பொலிஸார் தேடுதலை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியமையில் பிழைகள் இல்லை என்று குறிப்பிட்ட அவர், எனினும் பிரபாகரனை மதிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கோரவில்லை என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkp6.html
நாட்டின் ஒருமைப்பாட்டை மைத்திரியின் அரசாங்கம் காக்கும்!- மகாநாயக்கரிடம் உறுதி
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 03:39.56 PM GMT ]
மல்வத்த மகாநாயக்கரை இன்று சந்தித்த ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, தலைவர் ஓமல்பே சோபித்த ஆகியோர் இந்த உறுதிப்பாட்டை வழங்கினர்.
மைத்திரிபாலவுக்கு ஆதரவு அளிக்கும் ஹெல உறுமய, ஒருபோதும் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்காது என்றும் அவர்கள் மகாநாயக்கரிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்கள் மைத்திரிபாலவின் தேர்தல் அறிக்கையை தொடர்பிலும் மகாநாயக்கரிடம் விளக்கமளித்தனர்.
இதேவேளை தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் தளபதிக்கு அரசாங்கம் பாதுகாப்பை அளித்து வருகிறது என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkp7.html
ஜனாதிபதித் தேர்தல் என்பது ஆள்மாறாட்டத்திற்கான தேர்தலே: குமார் குணரட்ணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 03:13.25 PM GMT ]
வடமாகாண மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்களா? ஆள் மாற்றத்தை விரும்புகிறார்களா? என கேட்டால் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள். ஆனால் நடைபெறவிருப்பது வெறும் ஆள் மாற்றம் மட்டுமே என முன்னிலை சோசலிஷ கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.கிறீன்கிறாஸ் விடுதியில் நடைபெற்ற சமகால தேர்தல் நிலைமைகள் குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஜனாதிபதி தேர்தலில் இரு பெரும்பானமை கட்சிகளினதும் நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னான 66 வருடங்களின் சம்பவங்களை சற்றே எடுத்துப் பாருங்கள். நாங்கள் காலத்திற்குக் காலம் மாறி மாறிவந்த இந்த இரு பெரும்பான்மை கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றோம்.
ஆனால் நாம், அடைந்த நன்மைகள் எவையும் இல்லை. மாறாக நாட்டில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டது. இனவாதம் வளர்ந்தது.
தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனங்கள் மேலும் அடக்கி ஒடுக்கப்பட்டன. எனவே இந்த நிலையினை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இடதுசாரிகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பை கோருகிறோம்.
இந்நிலையில் சமகாலத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என யாரும் நினைக்க வேண்டாம்.
இது வெறுமனே ஒரு ஆள்மாற்றத்திற்கான தேர்தலாகவே அமைந்திருக்கின்றது. அதாவது மஹிந்த ஆட்சியிலும், மைத்திரிபால ஆட்சியிலும் சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை.
அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்கள் அதனை தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றன. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்விதமான நிபந்தனையினையும் விதிக்காமல் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றது.
ஆனால் கடந்த காலத்தில் தமிழ் மக்களுடைய மீள் குடியேற்றம், இராணுவ விலக்கல், சிவில் நிர்வாக நடைமுறை ஆகியவற்றை கோரியிருந்தனர்.
ஆனால் அவை தொடர்பில் ஒரு நியாயமான பதில் கிடைக்காமல் கூட்டமைப்பு எவ்வாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கலாம்.
மேலும் நாங்கள் மைத்திரிபால சிறிசேனவை அதிகம் பேசுவதனால் எம்மை மஹிந்தவின் ஆட்சகள் என சிலர் கூறுகின்றார்கள். ஆனால் அவ்வாறான நிலையில் இல்லை.
உண்மையில் மஹிந்த ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட இன்னல்களை மக்கள் தற்போதும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே அதனைக் குறித்து அதிகம் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதனாலேயே நாங்கள் அது குறித்துப் பேசவில்லை.
மேலும் நான் மீண்டும் இலங்கைக்கு வந்ததனால் நான் மஹிந்தவுடன் உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் வந்ததாகவும் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் அதிலும் உண்மையில்லை.
ஒரு நிலைப்பாடுள்ளவர்கள் இரண்டாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கையில் தற்போதுள்ள இடைவெளியை நிரப்ப நாங்கள் உள்ளே வந்திருக்கிறோம். அதற்காக நாங்கள் உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம் என்றோ, இலங்கையில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்றோ அர்த்தம் கிடையாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkp5.html
Geen opmerkingen:
Een reactie posten