காத்தான்குடியை அழிக்கும் ஹிஸ்புல்லாவின் சகாக்கள்….
காத்தான்குடியில் சிப்லி பாறுக்கின் வீடு உட்பட 04 வீடுகள் மீது குண்டு வீச்சுத் தாக்குதல்
எம்.எஸ்.எம். நூர்தீன்
எம்.எஸ்.எம். நூர்தீன்
காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் வீடு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு இன்று சனிக்கிழமை (03) அதிகாலை கைக்குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனாவை ஆதரித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூகின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத்தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி அல் அமீன் வீதியில்அமைந்துள்ள எம். பஷீர் என்வரின் வீட்டின் மீதும்இக் கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இதன் காரணமாக வீட்டின் முன் இருந்த கதிரைகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இதன் காரணமாக வீட்டின் முன் இருந்த கதிரைகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி உட்பட 4 பேரின் வீட்டில் கைக்குண்டு தாக்குதல்
காத்தான்குடியிலுள்ள, கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சிப்லி பாறூக் உள்ளிட்ட நான்கு பேரின் வீடுகள் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டு முன் பகுதியில் இருந்த கதிரைகள் உட்பட சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டு முன் பகுதியில் இருந்த கதிரைகள் உட்பட சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனாவை ஆதரித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூகின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத்தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் மற்றும் காத்தான்குடி அல் அமீன் வீதியில் அமைந்துள்ள எம். பஷீர் ஆகியோரது வீட்டின் மீது கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டு கட்சி அலுவலகங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று நள்ளிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த கதிரைகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அலுவலகமொன்று தாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. பாலமுனை வீதியிலுள்ள இவ்வலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களும், ஜனாதிபதியின் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

http://www.jvpnews.com/srilanka/92723.html
கடுமையான உயிர் அச்சுறுத்தல் மைத்திரி
பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கும் பாரியளவில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எமது பிணங்களின் மீதேறி வன்முறைகள் மூலம் தேர்தலை வெற்றிகொள்ள மஹிந்த ராஜபக்ஸ முயற்சிக்கின்றார் என்றால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களை படுகொலை செய்து ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முயற்சித்தால் அது, வரலாற்றில் இடம்பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியை கொலை செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றியீட்டினார் என வரலாற்றில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 8ம் திகதி வரையில் கடுமையான உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர், காவல்துறை மா அதிபர் ஆகியோரிடம் இதுவா ஜனநாயகம் என தாம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார். தாக்குதல்களின் போது விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92779.html
ஆளும் தரப்பின் கதைகளில் வீதி சிரிக்கும் அவலம்….
January 04, 201511:41 am
ஜனாதிபதித் தேர்தலில் நெருங்கி வந்துள்ள இறுதிக்கட்டத்தில் கள நிலவரம் குறித்து பலரும் பாரிய எதிர் பார்ப்பபுடன் இருப்பதை அவானிக்க முடிகிறது. குறிப்பாக சிங்களப் பகுதிகளின் நிலைமையை அவதானிப்பதில் அனேகர் பார்வை திரும்பி உள்ளது. காரணம் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் பெரும்பான்மை மக்கள் ஏற்கனவே அரசுக்கு சிவப்புக் கொடியை காட்டி விட்டதாக நம்பப் படுகிறது.
எனவே பலரது கருத்துக்களையும் திரட்டித் தருவது நல்லதென நினைக்கிறோம். இங்கு முக்கிய மாகக் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் குளிக்கப் போய் சேறு பூசிய சம்பங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
கடந்த 2ம் திகதி மத்திய மாகாண ஆளனர் இல்லத்தில் ஒரு ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
ஜனாதிபதி காரியாலய தொழிற்சங்க இணைப்புச் செயலாளர் ஒருவர், பொருளாதார அபிவிருத்தி திணைக்களத்தின் மத்திய வலய பணிப்பாளாரும் முன்னாள் மலைநாட்டு அபிவிருததி அதிகார சiபின் தலைவருமான அமரநாந்த மற்றும் ஜெனீவாவின் முன்னாள் தூதுவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ராஜபக்ச உற்பட பல உயர் பிரமுகர்கள் அங்கு சமூகமளித்திருந்தனர்.
அரசுக்கு விசுவாசமான பலர் அதாவது இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் அங்கத்தவர்களே அழைக்கப்பட்டிருந்தனர். கண்டி மாத்தலை, நுவரெலியா போன்ற இடங்களில் இருந்து பலர் வந்திருந்தனர். பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. வெளியே வந்தபின் பலரது முகங்களில் அசடு வழிந்தது. காரணம் கேட்ட போது குளிக்கப் போய் சேறு பூசிய கதையே பதிலாகக் கிடைத்தது.
இது பெரும்பான்மை மக்கள் மத்தியில் அதிலும் ஊடக வியலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இம் மாற்றமானது மைந்திரிப்பால சிரி சேனாவிற்கு பச்சைக்கொடி காட்டுவதாக உள்ளது. அத்துடன் எதிரணியில் இருந்து அரச பக்கம் சாய்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தற்போது தொடர்ந்து கட்சியில் பல வருடங்களாக இருப்பவர்களது வெறுப்பைத் தோற்று வித்துள்ளது. எடுத்துக் காட்டாக மத்தி யமாகாண சபை அரச தரப்பு அங்கத்தவர் ஆர்.ஜி. சமரநாயக்கா அவர்கள் மைந்திரிப்பால சிரி சேனாவிற்கு ஆதரவு தெரிவித்து கட்சி தாவிய பின் விடுத்த ஊடக அறிக்கையும் அதே சங்கதியைத்தான் தெரிவிக்கிறது.
அதாவது பத்து முறைக்கு மேல் என்னுடன் தோல்வி அடைந்த திஸ்ஸ அத்நாயக்கா கட்சி தாவினார் என்ற ஒரு காரணத்திற்காக அமைச்சராகி விட்டார்.என்னுடன் தோல்வி அடைந்த ஒருவருக்கக் கீழ் இருந்து எப்படி நான் கருமமாற்றுவது என்று கேட்டார். அது மட்டுமல்ல அவர் புதல்வர் பற்றிக் கேட்ட போது அவர் கூறிய பதில் சாக்கடையில் இருந்து அதன் துர்நாற்றத்தை அவர் நன்கு அறந்து அதன் பின் வெளியேறட்டும் என்று கூறினார். தான் இதுகால வரை இருந்த கட்சியைப் பற்றி அவர் கூறிய கருத்துத்தான் இது.
தற்போது அதிகமதிகம் சந்திக்கும் பெருமபான்மை சகோதரர்களது கருத்துக் கணிப்பு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக. ஆனால் … என்று ஒரு இழுப்பு இழுக்கிறார்கள். அதற்குக் கூறும் காரணம் அவர்கள் பாசையில் கள்ள வாக்கு போடப்படலாம் என்பது. ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு. இருப்பினும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் போடப் படுவதைக் குறைக்க ஏதாவது ஒரு யுத்தியின் அடிப்படையில் தடுக்க முடியும். இங்கு ஆர்பாட்டம் இல்லாத ஆரவாரம் இல்லாத வாக்களிப்பின் மூலம் அடைந்து கொள்ளலாம். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறியது பெரும்பான்மைக்கு மத்தியில் ஒரு ஆர்பாட்டத்தை அல்லது ஆரவாரத்தை தோற்றுவித்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
அனால் இ.தொ.கா. அரசுக்கு ஆதரவு என்ற தெரிவிப்பு அரசுக்கு சாதகமாகத் தெரிந்தாலும் இறுதி விளைவு கசப்பாகவே இருக்கலாம் எனப் பலர் கருதுகின்றனர். ஏனெனில் அங்கு தோட்ட மக்களை ஏமாற்றி வாக்குப் பெரும் முயற்சி அல்லது வாக்களிப்பைத் தடுக்கும் முயற்சிகளின் வேகம் குறையலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பபாகும். இதே வேலையை முஸ்லிம் அரசியல் தலைமைகளும் செய்திருக்கலாமே எனக் கவலைப் படுவோரும் இல்லாமல் இல்லை.
மாத்தலை மாவட்டத்திலிருந்து ஒரு அரசியல் வாதி 20 ற்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளில் சுமார் ஆயிரம் தோட்டத் தெழிலாளர்களை நுவரெலியாக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றாராம். இது அரசு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு வேலை என ஒருவர் கூறினார். நுவரெலியாவிலுள்ள கூட்டத்திற்கும் மாத்தலை மாவட்ட வாக்காளர்களுக்குமான தொடர்பு எதனை ஏற்படுத்தப் போகிறது.
யாழ்பாணத்தில் பத்தாயிரம் ரூபா தருவதாகவும் முதலில் 2500 கொடுக்கப்பட்டதாகவும் மிகுதி 7500 ரூபாவை கூட்டத்தில் வைத்து வழங்குவதாகவும் கூறப்பட்டதாகவும் தமக்கு அவ்வாறு பணம் கிடைக்கில்லை என்று அவர்கள் அங்கலாய்த்த செய்திகளும் தினசரிப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
அத்துடன் பிரமாண்டமான கட்டவுட்களை காட்சிப் படுத்தியும், அரச ஊடகங்களில் அடிக்கடி விளம்பரங்கள் செய்தும் செல்வாக்குப் பெற அரசு முயற்சித்த் போது; அவை குளிக்ப் போய் சேறு பூசிய கதையில் முடிகிறதைப் பலர் கூறினர்.
உதாரணமாக பொது வேட்பாளரை இலக்கு வைத்து சேறு வீசப் படும் வியம்பரங்கள் மூலம் அவருக்கு இலவச விளம்பரம்கிடைக்கிறது. இப்படி சேறு வீசம் விளம்பரம் மறு முனையில் திரும்பி இளவச விளம்பரமாவது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல எமது ஊடக நண்பர்களை நாம் அடிக்கடி நாடி பிடித்துப் பார்ப்போம். இதில் ஒரு எடுகோள் அல்லது பிரமாணம் என்ன வென்றால் சிறுபான்மை இன ஊடக வியலாளர்களது கருததுக்களை நாம் கணிப்பிடுவத்pல்லை. ஏன் தெரியுமா அவை சிறுபான்மை சமூகத்தின் அபிலாசையை பிரதிபலிக்கிறது என்ற நிலைமையிலாகும். ஆனால் பெரும் பான்மை ஊடகவியலாளர்கள் அனேகரது கருத்து மாற்றத்திற்கான அறிகுறி தென்படுவதாகக் கூறுகின்றனர்.
எனவே கூட்டு மொத்தமாக இலகுவாக வெற்றி பெறமுடியும் அல்லது கள்ள வாக்ககள் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்குமாயின் அரசு ஏன் இவ்வளவு தொகைப் பணத்தை செலவிட்டு வியம்பர யுத்திகளைக் கையாள வேண்டும் எனக் கேட்கின்றனர். இதன் மூலம் அவர்களது பயம் வெளிப் படுவதாகவும் கூறுகின்றனர். சுருங்கக் கூறின் குளிக்கப் போய் சேறு பூசிய கதையாகுமா? ஏன யோசிக்கவேண்டியுளளது.
mr001Kalboshanam J.M.Hafeez-
http://www.jvpnews.com/srilanka/92783.html
குமரன் பத்மநாதனை மகிந்த கட்டிப் பிடித்த போஸ்டர்:
இருப்பினும் இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், வழமையாக மகிந்த தரப்பு தான் இப்படியான தில்லு முல்லு வேலைகளைச் செய்யும். ஆனால் இம் முறை மகிந்த தரப்பில் உள்ள பல புள்ளிகள் எதிர் அணியில் உள்ளார்களே. அவர்களில் சிலர் தாம், மகிந்த பக்கம் இருக்கும்போது எதைச் செய்தார்களோ அதனை இப்ப செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
மகிந்த ராஜபக்ஷ ஜேம்ஸ் பீரிஸ் என்னும் நபரை சந்தித்தவேளை எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதனை பாவித்தே, கே.பி படத்தை இணைத்து போஸ்டராக வெளியிட்டு விட்டார்கள்.
இதனை அரசாங்க தரப்பு மீட்டிங் போட்டு ஊடகவியலாளர்களுக்கு சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஏன் என்றால் இது தேர்தல் காலம் அல்லவா. ஒரு வோட்டு சறுக்கினால் கூட ஆபத்து தான்.
நாளுக்கு நாள் மகிந்தர் பாடு திண்டாட்டமாகவே இருந்து வருகிறது.
http://www.jvpnews.com/srilanka/92787.html
ஆனந்தி கருத்தை மகிந்தரருக்கு ஆதரவான சிங்கள இணையங்கள் பிரசுரிக்க ஆரம்பித்து விட்டது
சமீபத்தில் ஆனந்தி தனது கருத்துக்களை தெரிவித்தார். இக் கருத்தை உடனே மகிந்தரருக்கு ஆதரவான சிங்கள இணையங்கள் பிரசுரிக்க ஆரம்பித்து விட்டது.
http://www.jvpnews.com/srilanka/92791.html
Geen opmerkingen:
Een reactie posten