[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 12:16.48 PM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தின் உட்கட்டமைப்பு மற்றும் புனர்நிர்மான வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான முகாமையாளர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான தலைவி லியுபே சோகுபோவா ஆகியோர், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை நேற்று சந்தித்த போதே இதனை குறிப்பிட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இதுவரை 23,000 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 2015ம் ஆண்டு 14 மில்லியன் யூரோக்களை ஒதுக்கி குறைந்தது 3000 நிரந்தர வீடுகளை அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் மீள்குடியேற்றம் மற்றும் அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குதல் போன்றவற்றில் சில குறைபாடுகள் காணப்பட்டதாகவும், எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான தடைகளை ஐரோப்பிய ஒன்றித்தின் உதவியுடன் தகர்க்கும் என நம்புவதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் மீள்குடியேற்றம் மற்றும் அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குதல் போன்றவற்றில் சில குறைபாடுகள் காணப்பட்டதாகவும், எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான தடைகளை ஐரோப்பிய ஒன்றித்தின் உதவியுடன் தகர்க்கும் என நம்புவதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வெளிநாட்டு சமூகத்துடன் நெருங்கிய உறவைப் பேன இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKciq6.html
பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க உடனடி நடவடிக்கை தேவை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 12:36.06 PM GMT ]
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த சம்பூர் பகுதியில் சுமார் 4000 பேருக்குச் சொந்தமான ஏறத்தாழ 1100 ஏக்கர் காணிகளை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வித சட்டநடைமுறையும் பின்பற்றப்படாமல் அந்த காணிகளுக்குச் சொந்தமான மக்களை அப்புறப்படுத்தி உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மகிந்த அரசு கையகப்படுத்தியது.
ஆந்த இடத்தில் இருந்த எட்டுக் கோயில்கள், ஆறு பாடசாலைகள், வைத்தியசாலை ஒன்று மற்றும் பொதுமக்களின் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
பின்னர் இந்த இடம் சிறப்புப் பொருளாதார வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் இன்றுவரை எதுவித கட்டமைப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலம் முன்னால் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச அவர்களின் நெருங்கிய உறவினர் தில்ஷான் விக்கிரமசிங்க அவர்களின் நிறுவனமான கேட்வே இன்டஸ்ரீசுக்குக் கையளிக்கப்ட்டது.
பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை முதலில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையிலும், பின்னர் விசேட பொருளாதார வலயம் என்ற போர்வையிலும் தனது குடும்ப உறவினருக்காகக் கபளீகரம் செய்தமையானது அரசு செய்த பாரிய குற்றமாகும்.
இன்றும் நான்கு முகாம்களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி, உலர் உணவுப் பொருட்களும் மறுக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ பட்டினி நிலையில் அவர்களைக் கடந்த எட்டு ஆண்டுகளாக வைத்திருப்பது அவர்களைப் பட்டினிபோட்டுக் கொல்வதற்கு ஒப்பாகும்.
அவ்வாறான பாரிய தவறுகளை புதிய அரசாங்கம் காலதாமதமின்றி நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும் அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி அந்த மக்களின் காணிகளில் காணிக்குச் சொந்தக்காரர்கள் அனைவரையும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளியில் தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தைத் தரக்கூடிய சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட உப்பள நிலப்பரப்பை தென்னிலங்கையைச் சேர்ந்த றைகம உப்பளக் கம்பெனிக்கு முன்னைய அரசாங்கம் வாறிவழங்கி இருக்கின்றது.
அங்கு குளோரின் தொழிற்சாலை உருவாக்குவதாகவும் மேலும் உப்புடன் தொடர்புபட்ட வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டபோதிலும் இதுவரை அங்கு எதுவித தொழிற்சாலைகளும் நிறுவப்படவில்லை. வெறுமனே தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரித்தான காணிகள் சூறையாடப்பட்டு தென்னிலங்கை பண முதலைகளுக்குத் தாரைவார்க்கப்படுகின்றது.
அரசாங்கம் தனது நூறுநாள் வேலைத்திட்டத்தில் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்தைக் கோருகிறது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னால் அமைச்சரும் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான மிலிந்த மொரகொடவிற்குக் கையளிக்கப்பட்ட 30 ஏக்கர் காணியையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKciq7.html
Geen opmerkingen:
Een reactie posten