[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 10:58.46 AM GMT ]
குறித்த தொலைக்காட்சி தனதாக்கிக் கொண்டிருந்த கிரிக்கெட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான அதிகாரத்தை தேசிய ரூபவாஹினிக்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ரூபவாஹினியின் புதிய தலைவர் பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் கிரிக்கெட் உரிமையை CSN தொலைக்காட்சி பெற்றுக் கொண்டதால் ரூபவாஹினிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக ஏற்கனவே குற்றச்சாட்டப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்சவினால் கால்ட்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (CSN) தொலைக்காட்சி நிறுவனம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKciq5.html
கட்சியின் போசகர் நிலையை மஹிந்த இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 01:34.27 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் அதிகாலை இராணுவப்புரட்சி ஒன்றுக்கு திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் மஹிந்தவின் கட்சிப் பதவி பறிபோகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பில் மஹிந்த ராஜபக்சவும் முன்னாள் சந்திரிக்கா குமாரதுங்கவும் ஒரு அதிகாரங்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் போசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மஹிந்த ராஜபக்ச கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அவர் பிறிதான கட்சி ஒன்றை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcirz.html
Geen opmerkingen:
Een reactie posten