தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 januari 2015

மகிந்தவின் மக்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சியை நிறுத்தக் கோரி தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதம்

சுவாமி மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடிய மகிந்த!
சுப்பிரமணியன் சுவாமி மகிந்த ராஜபக்சேஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, இந்திய � சிறிலங்கா உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்தப் பயணம் தொடர்பாகவே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் அவர் பேச்சு நடத்தியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான சுப்பிரமணியன் சுவாமி, சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அஜித் டோவலுடன் சிறிலங்கா விவகாரங்கள் குறித்து பேசியுள்ளது புதுடெல்லி அரசியல் வட்டாரங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலில் கடும் போட்டியைச் சந்தித்துள்ள நிலையில், அவர் சுப்பிரமணியன் சுவாமி மூலம் இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியிருப்பதாகவும், கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நம்பிக்கையானவரான அஜித் டோவல் மூலம், மகிந்த ராஜபக்சவின் கோரிக்கையை சுப்பிரமணியன் சுவாமி இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
03 Jan 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1420286197&archive=&start_from=&ucat=1&
மகிந்தவின் மக்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சியை நிறுத்தக் கோரி தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதம்
ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய மகிந்த கலந்துகொள்ளும் ஜனாதிபதி மக்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சி 2015 ஜனவரி 5 ஆம் திகதி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படுகின்றமை தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக நெறிமுறைகளை மீறுவதாகும் என்று புதிய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் கடிதம் மூலமாக தேர்தல்கள் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் அதை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இரவு அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட ஊடக நெறிமுறைகளை மீறுகின்ற செயற்பாடு இது எனவும் அந்தக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினமோ அல்லது அண்மித்த தினமொன்றிலோ ஒளிபரப்பு செய்தால் அதற்கு இணையான ஒரு நிகழ்ச்சியை மற்றும் சமமான நேரப் பெறுதியில் எதிரணி பொதுவேட்பாளரின் நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்வது நடைமுறை சாத்தியமற்ற விடயம் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வேலைத்திட்டமோ அல்லது அதை ஒளிப்பதிவு செய்த அடிப்படையிலோ தற்போதைய ஜனாதிபதியை மாத்திரம் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒளி/ஒலிபரப்பு செய்வதை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறும் தேர்தல்கள் ஆணையாளரை சட்டத்தரணி கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஸ கோரியுள்ளார்.
03 Jan 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1420286976&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten