கனடா- மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாயாருக்கு மீண்டும் ஒரு முறை இதயத்தை நொருக்கும் சம்பவம் வன்கூவர் விமான நிலையத்தில் ஏற்பட்டது. தனது மகனின் சாம்பலை ஒரு பட்டு கேரியருக்குள் வைத்திருந்ததை வெளியே எடுக்குமாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமையே காரணமாகும்.
மார்நி முட்ச் என்ற இவர் தனது மகன் றெஹெட்டின்  அஸ்தியை ஒரு பெரிய அடைத்த கருப்புள்ளி வண்டிற்குள் வைத்திருந்ததுள்ளார். தனக்கு ஆறுதல் தேவைப்படும் போது அணைத்துக்கொள்ள அவ்வாறு வைத்திருக்கின்றார்.
கடந்த நவம்பர் மாதம் இவரது 20-வயது மகன் றெஹெட் வன்கூவர் பொலிசாரால் சுடப்பட்டு இறந்துள்ளார். இவரது மரணவிசாரனை நடந்து வருகின்றது.
முட்ச் வன்கூவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்கூடாக அந்த கருப்புள்ளி வண்டை கொண்டு வரும் போது மகனின் சாம்பலை திரையிடுவதற்காக வெளியே எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தகனம் செய்யப்பட்டு மீந்த பகுதி- எக்ஸ்-றே பாதுகாப்பு வழியாக போக கூடிய கொள்கலனின் இருக்குமாயின் – கையில் கொண்டு செல்லும் பொதிக்குள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. தகனம் செய்ததற்கான சான்றிதளும் முட்சிடமிருந்தது.
அடைக்கப்பட்ட லேடிபக்கை பார்த்த அதிகாரி சாம்பலை வெளியே எடுக்க வேண்டும் என கூறியதாக முட்ச் செய்தியாளரிடம் கூறியுள்ளார். தான் அதை மறுத்ததாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரி மற்றும் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் நடந்த பின்னர் முட்ச் தனது மகனின் அஸ்தி அடங்கியிருந்த பிளாஸ்டிக் பையை வெளியே எடுத்து கவுண்டரில் போட்டுவிட்டு தனது மகனின் எஞ்சியுள்ள பகுதி என கூறியுள்ளார்.
இதன் காரணமாக இவர் தனது விமானத்தையும் தவறவிட்டு விட்டார்.
பின்னர் கனடிய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் முட்சிடம் மன்னிப்பு கோரியதுடன் என்ன நடந்தது என்பது குறித்து விசாரனை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனின் அஸ்தியை அணைக்கும் போது தனது கை அவனை அணைத்திருப்பது போல் தான் உணர்வதாகவும் எனக்கு கிடைத்தது அவ்வளவு தான் எனவும் அந்த தாய் கூறினார்.
பிள்ளையின் பிரிவின் வேதனை பெற்ற தாய்க்கு மட்டும் தான் புரியும்.
ash2
ash1