தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு

ஜனாதிபதி மைத்திரி பொலன்னறுவைக்கு விஜயம்! நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் ஏற்பாடு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 06:49.18 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொலன்னறுவை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலன்னறுவையில் தோப்பாவெ மற்றும் ஹிங்குராக்கொடை ஆகிய இடங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் பின்னர் இன்று மாலை கொழும்பு திரும்பவுள்ள ஜனாதிபதி கொழும்பில் இடம்பெறும் அரசாங்க உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciu7.html
பஸ் விபத்தில் 9 பேர் காயம் - நீரில் மூழ்கிய சிறுவர்கள் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 06:30.40 AM GMT ]
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதனால் அதில் பயனித்த 09 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பக்கன்ன பிரதேசத்தில் பஸ் சாரதியினால் பஸ்ஸின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் இவ்விபத்து நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நீரில் மூழ்கி சிறுவர்கள் மரணம்!
மட்டக்களப்பு - ஏறாவூர் தாமரைக்கேனிஎல பிரதேசத்தில் குளிக்க சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நேற்று முன்தினம் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 11 வயதுடைய ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciu5.html
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தயாசிரி, ஹரின் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 06:40.38 AM GMT ]
எதிர்வரும் பொதத்தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக வடமேல் மாகாணம் முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தேசிய அரசாங்கத்தில் இருப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான தயாசிரி ஜயசேகர 2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமேல் மாகாணம் சபைக்காக போட்டியிட்டார்.
அதிகபடியான வாக்குகள் பெற்று வடமேல் மாகாணம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்: ஹரின் பெர்ணான்டோ
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி பலத்தை பெற்றுக்கொடுக்க போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு செல்வதா அல்லது மாகாண சபையில் இருப்பதா என்பது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது பலர் என்னை ஏளம் செய்தனர் நாடாளுமன்றத்திற்கு நான் வருவேன் என்ற அன்று நான் கூறியது இந்த உண்யைமாக மாறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciu6.html
தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 06:02.20 AM GMT ]
தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினை குறித்து அவதானம் செலுத்தவில்லை என்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியாவில் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
வடக்கில் காணிகளை மீள் எடுத்தல், காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் வடக்குத் தமிழர்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.
குறித்த பிரச்சனைகளுக்கு அவதானம் செலுத்தவில்லை என்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciu3.html

Geen opmerkingen:

Een reactie posten