தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

தமிழ்,முஸ்லிம் என்று பிரிந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை நான் வெறுக்கின்றேன்: அமீர் அலி!



டிக்கோயா தரவளையில் மக்கள் ஆா்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 05:09.28 AM GMT ]
ஹற்றன் டிக்கோயா தரவளை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதி சேதமடைந்து இருப்பதானால் அதனை புனரமைத்து தருமாறு கோரி இன்று காலை இத்தோட்ட மக்கள் அவ்வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த அரசாங்கத்திலிருந்த இருந்த அமைச்சர்மார்களிடம் இவ்வீதியை புனரமைத்து தருமாறு பல தடவைகள் கோரிய போதிலும் எவரும் இதனை கண்டுக்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இத்தோட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.
டிக்கோயா நகரத்திலிருந்து தரவளைக்கு செல்லும் சுமார் 4.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட இப்பாதை செப்பனிடப்படாமல் சுமார் பல வருடங்களாக இழுபறியான நிலையில் உள்ளது எனவும் இவ்வீதியை திருத்தி அமைத்துக் கொடுப்பதாக வாக்குறுதிகளை வழங்கிய போதும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லையென இப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டிகின்றனர்.
எனவே இவ்வீதியை காலம் தாழ்த்தாமல் மிக விரைவில் புனரமைத்து தர அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என இத்தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciuy.html
நாள்காட்டியின் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும்: பெப்ரல்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 04:41.32 AM GMT ]
நாள்காட்டியின் அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.
இதனால் தேர்தல் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கலாம் என குறித்த அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹேட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம் பெற்ற அரசாங்கம் அவசியமின்றி தேர்தல்களை அறிவித்தார்கள் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் சரியான நேரத்திற்கு மாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcit5.html
சமையல் எரிவாயுவின் விலைகளை குறைக்க நடவடிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 04:41.38 AM GMT ]
சமையல் எரிவாயுவின் விலையைக் குறைப்பது தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 29ம் திகதி தற்போதைய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்போது சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcit6.html
100 நாள் திட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்: யாழ் கத்தோலிக்க மதகுருமார்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 05:55.46 AM GMT ]
தமிழ் அரசியல் கைதிகள் பல வருடங்களாக சிறையில் வாழும் நிலையை உடன் நிறுத்தி இவர்களை 100 நாள் திட்டத்தில் விடுதலை செய்யுமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையிலான குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலம் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் வெள்ளை வான் கடத்தல், இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் சம்பந்தமாகவும் உடன் விசாரணை நடத்தப்படல் வேண்டும் எனவும் கோரியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciu2.html
தமிழ்,முஸ்லிம் என்று பிரிந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை நான் வெறுக்கின்றேன்: அமீர் அலி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 05:54.12 AM GMT ]
தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் பிரமுகர்களும், அரச அலுவலர்களும் செய்த ஊழல்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்துவதே எனது நூறு நாள் வேலைத்திட்டத்தின் முதற்திட்டம் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தனது அமைச்சுப் பொறுப்புக்களை செத்சிரிபாயாவில் உள்ள தனது அமைச்சில் நேற்று மாலை கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இந்த அமைச்சின் மூலம் நாட்டில் உள்ள மக்களின் கஸ்டங்களில் பங்கு கொள்ள விரும்புவதோடு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதோடு கல்குடாத் தொகுதியில் உள்ள முஸ்லீம் தமிழ் மக்களுக்கு மிக நீண்டநாள் பிரச்சினையாக இருந்து வருகின்ற சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதுடன் மாவட்டத்தில் எல்லை ரீதியாகவுள்ள உள்ள பிரச்சினைகளுக்கு உரிய அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எல்லை ரீதியான பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நம்பிக்கையுள்ளது.
கடந்த காலங்களில் இந்தப் பிரச்சினைகளுக்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்ட போது சில தடங்கள்கள் ஏற்பட்டதன் காரணமாக எனது முயற்சிகள் தீர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளததாகவும் எதிர்காலத்தில் மாவட்டத்தில் உள்ள தமிழ் கட்சிகளை பிரதி நிதித்தவப்படுத்தும் தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேசி அவர்களது இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள உள்ளேன்.
இந்த அரசாங்கம் ஒரு நல்லாட்சியினை மையப்படுத்தி முன்னெடுக்கும் அரசாங்கமாக இருப்பதானால் தானும் தனது மாவட்டத்திலும் குறிப்பாக தனது பிரதேசத்திலும் அரசியலில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புவதோடு மாவட்டத்தில் இடம் பெருகின்ற அபிவிருத்திகள் உரிமை சார்ந்த விடயங்களை மேற்கொள்கின்ற போது அப்பிரதேசத்தில் இருக்கின்ற தழிழ் அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிகளோடு கலந்தாலோசித்து செயற்படவுள்ளேன்.
தமிழர்கள், முஸ்லீம்கள் என்று பிரிந்து செயற்படும் அரசியல்கலாசாரத்தை தான் வெறுப்பதாகவும் தனது எதிர்கால அரசியல் வாழ்க்கை சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியல் கலாசாரமாக மட்டக்களப்பு மாவட்டத்தை மாற்றுவதற்கு முயற்சிக்கவுள்ளேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னால் காத்தான்குடியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டமானது மாவட்டம் முழுவதற்கும் வழங்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டாலும் மாவட்டத்தில் தூய குடிநீர் இல்லாமல் உள்ள தமிழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் குறிப்பாக கல்குடாத் தொகுதிக்கும் இந்த வருட இறுதிக்குள் வழங்குவதற்கான முயங்சிகளை மேற் கொள்ளவுள்ளதாகவும் இந்த தூய குடிநீர் பிரச்சினை தொடர்பாக கல்குடாத் தொகுதி மக்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக தான் தெளிவாக தெரிவித்து வந்துள்ளோன்.
தமது பிரதேசத்தில் உள்ள கிணறுகள் மூலம் மலசல கூடங்களின் வடிச்சலைத்தான் குடித்து வருகின்றோம் இது எதிர்காலத்தில் புற்றுநோய்களைக் கொண்டு வரும் அபாயம் உள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளேன்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் யார் வேண்டுமானாலும் களமிறங்கலாம் இது இந் நாட்டின் ஜனநாயக உரிமையாகும் அந்தவகையில் கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இருந்து யாரும் கேட்கமுடியும் இதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது அது ஒவ்வொருவரது அரசியல் உரிமையாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciu1.html

Geen opmerkingen:

Een reactie posten