[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:20.58 AM GMT ]
சிங்கள பௌத்தர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பாதுகாக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு வழங்க முடியாது என்ற காரணத்தினால் ஹக்கீம் எதிர்த் தரப்பிற்கு தாவினார்.
பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவளித்த காரணத்தினால் முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியை விட்டு விலகவில்லை.
முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக அலகு வழங்க ஜனாதிபதி இணங்கியிருந்தால் ஹக்கீம் தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருப்பார்.
ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதின் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய தேசத்துரோக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.
சிங்கள பௌத்தர்கள் இந்த கூட்டணியை தோற்கடித்து மஹிந்தவை பாதுகாத்து அவரை வெற்றியீட்டச் செய்ய வேண்டுமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
“உங்களது நடவடிக்கைகள் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்க இணங்கினார்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றார்களே உண்மையா? என சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo3.html
இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்த அறிவிப்பு பொய்யா? மக்கள் விசனம்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:19.28 AM GMT ]
இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்த அறிவிப்பு பொய்யான என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு 31ம் திகதி முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பப் படிவங்கள் கூட இதுவரையில் அச்சிடப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பத்து நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்புரைக்கு அமைய இந்த குடியுரிமை வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இதற்கான எந்த ஆயத்தங்களும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமைக்காக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் குடியுரிமை பிரிவு அதிகாரிகளையும் சிலர் திட்டிச்சென்றுள்ளனர்.
இதற்கான விண்ணப்படிவம் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்டு தமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரமளவில் இணையத்தின் ஊடாக விண்ணப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo2.html
கெய்ன் எனெர்ஜியிடம் இருந்து 7 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளாமை தொடர்பில் விசாரணை: சம்பிக்க
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:14.33 AM GMT ]
மன்னார் கடற்பகுதியில் எரிபொருள் அகழ்வில் ஈடுபட்டிருந்த கெய்ன் எனெர்ஜி நிறுவனத்திடம் இருந்து சுமார் 7 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ளாமை தொடர்பில் மைத்திரிபால அரசாங்கத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மன்னார் பகுதியில் எரிபொருள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர் கெய்ன் எனெர்ஜி நிறுவனத்தின் பங்குகளின் பெறுமதி அதிகரித்து அதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்தது.
எனினும் இலங்கையுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறி அந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்துக்கு குறித்த தொகையை செலுத்தவில்லை.
கெய்ன் எனெர்ஜி நிறுவனம், பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளயரின் நண்பருடைய நிறுவனமாகும். என்றும் ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo1.html
மஹிந்தவை நிச்சயம் வீட்டுக்கு அனுப்பி வைப்போம்: விக்ரமபாகு கருணாரட்ன
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:12.06 AM GMT ]
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு தமிழ் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது.
அவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களித்தாலும், மஹிந்த தோல்வியைத் தழுவுவார். அதில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவுவார் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என சிங்கள ஊடகமொன்று தொலைபேசி மூலமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மக்களின் ஆதரவு முழுமையாக மைத்திரிபாலவிற்கு என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னதாகவே கொழும்பு வாழ் தமிழ் மக்கள் யாருக்கு ஆதரவளிக்கின்றார்கள் என்பது புலனாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தமழ் மக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo0.html
போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன ஈழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சி: பீரிஸ்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:07.28 AM GMT ]
போரின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் போன தமிழீழத்தை அரசியல் ரீதியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மாகாணசபை அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் சம்பிக்க ரணவக்க மாகாணசபை அதிகாரங்களை குறைத்து ஆளுனரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டுமென கோருகின்றார்.
எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையில் பாரியளவில் கருத்து முரண்பாடு நிலவி வருகின்றது.
எதிர்க்கட்சியின் பிரதான இலக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதேயாகும்.
முஸ்லிம்களுக்கு கல்முனையில் தனியான அலகு தேவையென ரவூப் ஹக்கீம் கோரியதாகவும் அதனை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன சமூகங்களின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த முஸ்லிம் தலைவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கவில்லை.
அரசாங்கம் இனவாத அரசாங்கம் அல்ல�� இதன் காரணமாகவே பாலஸ்தீன இராச்சியம் உருவாவதற்கு ஜனாதிபதி பூரண ஆதரவளித்தார்.
சில இணக்கப்பாடுகளின் அடிப்படையில் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்ல நன்றியறிந்த மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbloz.html
Geen opmerkingen:
Een reactie posten