அனந்தி மயக்கியது என்னாலா?? இதுவல்ல காரணம் மாவை…
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவை சேனாதிராஜா தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் கூறுகையில்,
நான் தொலைபேசி அழைப்பெடுத்து அனந்தியிடம் பேசியது உண்மைதான். ஆனால் ஊடக செய்திகள் சொல்லும்படி நான் அவரை திட்டவில்லை. நாட்டு நிலை குறித்தே பேசியிருந்தேன். என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான் ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதி ஒருபோதும் அப்படி பேசுபவர்கள் அல்ல. நான் கதைத்ததால் தான் அனந்திக்கு இவ்வாறு ஏற்பட்டதென்றால் நான் அதற்கு மனம் வருந்துகின்றேன்´ என்றார்.
தொடர்புடைய செய்தி
அனந்தியை மிரட்டினாரா மாவை? மயக்கம் போட்டு விழுந்த அனந்தி
http://www.jvpnews.com/srilanka/92520.html
ஆமியை இழந்த ஹக்கீமின் சகாக்கள்…
நேற்று முன்தினம் முதல் கிழக்கு மாகாண சபையின் உதவி தவிளாருக்கும், மாகாண அமைச்சரான நசீர் அஹமட்டுக்குமான பாதுகாப்புகள் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகி இருந்தாலும், கிழக்கு மாகாண சபையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த ஆதரவளிக்காது என்று அந்த கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
எனினும் சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
http://www.jvpnews.com/srilanka/92524.html
வெளியேறியது மகிந்தரின் முக்கிய அணி…. மைத்திரியிடம்….
இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் சந்தித்து எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவை வெளிப்படுத்துவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முன்னாள் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி பொது வேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொண்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருந்த போதும் போதுமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் வாகனம் ஒன்றும் அலுவலகம் ஒன்றும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாட்டின் நல்லாட்சிக்காகவும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு கருதியும், மலையக அபிவிருத்தி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதாக வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க எதிரணியுடன் இணைய திட்டம்?
பிரதி சுகாதார அமைச்சரும், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லலித் திசாநாயக்கா, பொது எதிரணிக்கு தாவும் ஆயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான இவர், ஐ.தே.கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு சுகாதார அமைச்சர் பதவி கொடுத்ததில் கட்சித் தலைமையோடு அதிருப்தியுற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/92607.html
Geen opmerkingen:
Een reactie posten