தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

ஜனாதிபதியின் பதவிக்கால தவணை நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்! வவுனியாவில் மைத்திரி!

வேக கட்டுபாட்டை இழந்த டிப்பர் வாகனம்: உயிர் தப்பிய சாரதி
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 02:52.42 AM GMT ]
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அளவுக்கதிகமான பிளாஸ்டிக் பொருட்களுடன் சென்ற டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இயக்கச்சிக்கும் புதுக்காட்டுச்சந்திக்குமிடையில் மிகவேகமாக சென்ற சமயம் பாதையிருந்து தடம் மாறியபோது வாகனத்தின் முற்பகுதி வேறாக பிரிந்து விபத்துக்குள்ளானது.
இதில் சாரதி தெய்வாதீனமாக பாய்ந்து உயிர்தப்பியுள்ளார். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகளைப் பளைப்பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnw7.html
குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம்!
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 02:57.29 AM GMT ]
முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
முன்னணி சோசலிச கட்சியின் தலைவரான குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து குமார் குணரட்னம் நாடு கடத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnxy.html
முட்கொம்பனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செரண்டிப் சிறுவர் இல்லம் உதவி
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 05:41.40 AM GMT ]
கிளிநொச்சி முட்கொம்பன் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க, செரண்டிப் சிறுவர் இல்லம் வெள்ள நிவாரண உதவிப்பொதிகளை நேற்று முன்தினம் வழங்கியுள்ளது.
இதில் செரண்டிப் சிறுவர் இல்ல நிர்வாகி கந்தசாமி மற்றும் அவரின் பாரியார், ஏழாலை கலைமகள் விளையாட்டுக்கழக தொண்டு அணியினர், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களான தயாபரன், சுப்பையா, அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் கரன், முட்கொம்பன் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனர்த்த முகாமைத்துவ பிரவினர் பணிகளில் ஈடுபட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnxz.html
ஆனமடுவ நகரில் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 06:00.35 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆனமடுவ நகர தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைமடு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnx0.html
அரசாங்கத்தின் சேறுபூசும் ஊடக பிரச்சாரம்: ஹக்கீம் ஈரானில் நம்பிக்கைத் துரோகம் செய்தார்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 06:08.06 AM GMT ]
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈரானில் பொருளொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு பணம் கொடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அரச ஊடகங்களில் வெளிவந்திருக்கும் மேலதிக தகவல்கள் வருமாறு, ஹக்கீம் அமைச்சராக இருந்த காலத்தில் ஈரானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் ஈரானில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஆடம்பரமான தரைவிரிப்பு ஒன்றை கொள்வனவு செய்திருந்தார்.
அதன்போது தரைவிரிப்பின் பெறுமதியில் அரைவாசியை செலுத்திய ரவூப் ஹக்கீம், தான் ஒரு அமைச்சர் என்றும் எஞ்சிய தொகையை பின்னர் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அவர் ஒரு முஸ்லிம் என்பதால் குறித்த கடை உரிமையாளரும் சம்மதித்து தரை விரிப்பை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளார்.
எனினும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எஞ்சிய தொகையை செலுத்தாது திருட்டுத்தனமாக இலங்கை திரும்பிவிட்டார்.
இது குறித்து அறிந்த கடை உரிமையாளர் தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஹக்கீமின் மோசடி குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ரவூப் ஹக்கீம் தனது ஈரான் விஜயத்தின் பின்னரும் நீண்ட நாட்கள் வரை அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
ரவூப் ஹக்கீம் அமைச்சராக அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் காலம் வரை இதுபோன்ற எந்தவொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிநாடொன்றின் ஜனாதிபதிக்கே கூட இன்னொரு நாட்டில் கடனுக்கு கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயம் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அறிவீனர்களே அரச ஊடகங்களில் இருப்பதும் இந்தச் செய்தி மூலம் வெளிதச்சத்துக்கு வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnx1.html
மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 06:17.09 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆனமடுவ நகர தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரி்வு தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆனமடுவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnx2.html
ஜனாதிபதியின் பதவிக்கால தவணை நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்! வவுனியாவில் மைத்திரி
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 06:24.26 AM GMT ]
ஜனாதிபதி பதவியின் தவணைக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வவுனியாவில் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மைத்திரிபால, தற்போதைய நிலையில் அபிவிருத்தி என்ற மாயையில் ராஜபக்ஷ குடும்பத்தினர் மட்டுமே அபிவிருத்தி அடைந்துள்ளார்கள். இந்த நிலை மாற்றியமைக்கப்படும்.
நாட்டின் அனைத்து மக்களும் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வகையிலும் ஜனநாயம் மீளக் கட்டியெழுப்பப்படும்.
அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் அவரவர் மத வழிபாட்டிற்கான சுதந்திரம் மற்றும் அதற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
அத்துடன் ஜனாதிபதியின் ஒரு தவணைக்காலம் நான்கு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் அதிகார வெறியில் ஊழல், மோசடிகளை மேற்கொள்வது தடுக்கப்படுவதற்கான வழி ஏற்படும் என்றும் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnx3.html
எதிர்வரும் 5ம் திகதியுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு: பின்னர் மௌனக் காலக் கெடு: மஹிந்த தேசப்பிரிய
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 06:47.54 AM GMT ]
எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும். அதற்கு பின்னர், வாக்களிப்பு தினம் வரை மௌனக்காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இது, தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து தகவல்கள் தொடர்பாகவும் நன்கு சிந்தித்துப்பார்த்து பொருத்தமான தீர்மானமொன்றுக்கு வருவதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்கு என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்நிலையில், கட்சித்தாவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்கும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கும் கட்சி மாறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் கொழும்பு அரசியல் என்றுமில்லாதவகையில் சூடுபிடித்துள்ளன. தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதியமைச்சர் பதவியை நேற்று புதன்கிழமை இராஜினாமா செய்த முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா, எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர்கள் 18 பேர் எதிரணியுடன் நேற்று புதன்கிழமை இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnx5.html


Geen opmerkingen:

Een reactie posten