தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

அமெரிக்க TV சீரியலைப் பாத்து காதலியைக் கொலைசெய்த 16 வயதுச் சிறுவன் !


அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "டெக்ஸ்டர்" என்னும் TV சீரியலைப் பார்த்து அடிமையான 16 வயதுச் சிறுவன், தனது 17 வயதுக் காதலியை வெட்டிக்கொலைசெய்துள்ளான். பிரித்தானியா ஆக்ஸ்பேட் ஷியரில், இக்கொலை கடந்த வருடம் நிகழ்ந்துள்ளது. அதன் தீர்ப்பு நேற்றைய தினம்(02) வெளியாகியுள்ளது. குறித்த 16 வயதுச் சிறுவனுக்கு தற்போது 17 வயது ஆகிறது. 25 வருட சிறைத்தண்டனையை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். TV இல் வரும் "டெக்ஸ்டர்" என்னும் சீரியலை இச்சிறுவன் தவறாது பார்த்து வந்துள்ளான். அதில் ஒரு இளைஞன் இளம்பெண்களை கொலைசெய்து, அங்கங்களை வெட்டி பாலித்தீன் பாக்கில் கட்டி எறிவது வழக்கம். இதனை தவறாமல் பார்த்து வந்த இச்சிறுவன் அதுபோலச் செய்ய திட்டமிட்டுள்ளான்.
அப்பா அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது 17 வயதுக் காதலியை வீட்டுக்கு அழைத்துள்ளான். படுக்கை அறைட்யில் வைத்து, அவரை தலையிலும் பின் புறமாகவும் கத்தியால் குத்தியுள்ளான். இறந்த தனது காதலியின் இரண்டு கால்கள் மற்றும் கைகளை வெட்டி எடுத்து அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அடைத்துள்ளான். இவை அனைத்தும் நீதிமன்றில் வாசிக்கப்பட்டுள்ளது. இக்கொலையைச் செய்ய எந்தக் காரணமும் இல்லை. இச்சிறுவன் மன நிலை பாதிக்கப்பட்ட சிறுவனும் அல்ல. TV சீரியல் மோகத்தில் இப்படிச் செய்துள்ளான். அதற்கான முழுத் தண்டனையையும் இவன் அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1134.html

Geen opmerkingen:

Een reactie posten