[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 12:10.02 PM GMT ]
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பதுளை மாவட்டத்தில் மீரியபெத்த, கொஸ்லந்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் ஏராளமானோர் புதையுண்டும், காணாமலும் போயுள்ளதை அறிந்து அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.
தோட்டப்புற மக்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன்.
இலங்கையில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் நிகழ்ந்த கோர சுனாமி அனர்த்தத்தின் பின்னர் ஏற்பட்ட பாரிய மனித அவலமாக இந்தச் சம்பவத்தைக் கருதலாம்.
இந்த மண்சரிவில் சிக்கி காயமடைந்தோர் சுகமடைய பிரார்த்திப்பதோடு, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளது.
- பதுளையில் பாரிய மண்சரிவு பலர் பலியாகியிருக்கலாம் என சந்தேகம்!- இதுவரை பத்து சடலங்கள் மீட்பு
- மண் சரிவில் உயிர் தப்பியோரின் கண்ணீர்க் கதை! 300இற்கும் மேற்பட்டவர்கள் எங்கே?
- அமைச்சர் தொண்டமான் பதுளை விரைந்தார்: மீட்பு பணியில் விமானப்படை
http://www.tamilwin.com/show-RUmszARdKXkqy.html
லைகா மொபைல் உரிமையாளர் சுபாஷ்கரன் மற்றும் பிரேம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது?
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 12:34.12 PM GMT ]
கத்தி படம் வெற்றி பெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள்.
பின்னர் மாலைதீவில் இருந்து இன்று காலை லண்டன் திரும்ப இருந்துள்ளனர்.
இந்தநிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.
சுபாஷ்கரன் பாஸ்போட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளுக்கும் சுபாஷ்கரன் குழுவினருக்கும் இடையோ தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கைதிற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில் குறித்த குழுவினர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு அடுத்து லண்டன் நோக்கி புறப்பட இருக்கும் விமானத்திற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkqz.html
லைக்கா மோபைல் உரிமையாளர் சுபாஷ் கொழும்பு விமான நிலையத்தில் தடுத்துவைப்பு !
india time?[ Oct 29, 2014 04:57:14 PM | வாசித்தோர் : 11140 ]
லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மோபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜ ஆவர்கள் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். பின்னர் மாலை தீவில் இருந்து இன்று காலை(29) லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இன் நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.
இன் நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனிடம் விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறும் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள். இச்சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது என சக பயணிகளில் ஒருவர் கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். தம்மை புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளம் காட்டிய நபர்களே சுபாஷ்கரனை விமானத்தில் இருந்து இறங்கி உள்ளே கொண்டுசென்றுள்ளார்கள் என்றும் அப்பயணி மேலும் தெரிவித்துள்ளார்.
30 க்கும் மேற்பட்ட கத்தி திரைப்பட குழுவினர் அந்த விமானத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் எவ்வளவோ தடுக்க முற்பட்டும் அவர்களால் எதனையும் செய்யமுடியவில்லை என்று விமானத்தில் உள்ள பயணி மேலும் தெரிவித்துள்ளார். மாலைதீவில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் லண்டன் பயணிக்க பலர் இருந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு மாற்று விமானசேவையாகும்(TRANSIT FLIGHT). பயணிகள் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தினுள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் விமானத்தினுள் தங்கியிருக்க, கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் பயணிகளை அது ஏற்றிக்கொண்டு, லண்டனுக்கு புறப்படும் விமானம் ஆகும். இன் நிலையில் சுபாஷ்கரன் கைதுசெய்யபப்ட்டது ஏன் என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இச்செய்தியை கொழும்பில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உறுதிசெய்யமுடியாத நிலையும் காணப்படுகிறது.
இருப்பினும் இன்றைய தினம் கொழும்பில் இருந்து லண்டன் செல்லவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் விமானம் UL 503 சுமார் 1 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1322.html
Geen opmerkingen:
Een reactie posten