[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 01:25.37 AM GMT ]
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று மாலை மாத்தறையில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை கடலில் மீன்பிடிப்பதற்கு வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதியளித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்தநிலையில் இலங்கை கடலில் மீன்பிடிக்க வெளிநாடுகளுக்கு அனுமதிப்பதன் மூலம் அமைச்சர் சேனாரத்ன, தரகுப்பணம் பெற்றுக்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் குற்றம் சுமத்தினர்.
மாத்தறை பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1500 மீனவர்கள் வரை பங்கேற்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlw4.html
எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: பசில் ராஜபக்ஷ
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 01:36.18 AM GMT ]
எதிர்வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்றுக்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இந்த ஆரம்ப கட்ட சந்திப்பு நடத்தப்பட்டது.
தேசிய சுதந்திர முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவினை திரட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவினை திரட்டும் நோக்கில் சில விசேட பிரதிநிதிகளை ஆளும் கட்சி நியமித்துள்ளது.
இதன் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக நேரடியாக அறிவித்துள்ளன.
மேலும் சில கட்சிகள் ஆதரவளிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlw5.html
இலங்கைத் தூதரகத்திற்கு எதிராக லெபனானில் ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 01:46.03 AM GMT ]
லெபனானுக்கான இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் சுமார் 85000 இலங்கையர்கள் ஈடுபடவுள்ளனர்.
இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக லெபனானின் இலங்கையர் சங்க ஒன்றியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
லெபனான் வாழ் இலங்கையர்களின் தேவைகளை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் நிறைவேற்றுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தூதரத்தில் கடமையாற்றி வரும் பதில் அமைச்சு ஆலோசகர் உரிய முறையில் கடமையாற்றுவதில்லை எனவும் அவரை மீள அழைத்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதில் அமைச்சு ஆலோசகர் முன்னாள் தூதுவரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டணமின்றி தற்காலிக கடவுச் சீட்டை ஒரே நாளில் வழங்க முடியும் என்ற போதிலும், அதற்காக 175 அமெரிக்க டொலர் அறவீடு செய்வதுடன் ஒரு மாதம் கழித்தே தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
லெபனானில் பிறந்த இலங்கைக் குழந்தைகளுக்கு வீசா வழங்காது அவர்களையும் அவர்களது தாய்மாரையும் நாடு கடத்தும் நடவடிக்கைகளைகளுக்கு தூதரகமும் உடந்தையாக செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுத்து லெபனான் வாழ் இலங்கையர்களின் நலனை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlw6.html
சிங்கள பகுதிகளில் யானைத் தடுப்பு வேலிகள்! பொலநறுவைத் தமிழர்கள் கவலை (செய்தித் துளிகள்)
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 02:39.43 AM GMT ]
பொலநறுவை பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் பகுதிகளுக்குள் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், பெரும்பான்மையின மக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டுமே யானை தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமது பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொலநறுவை பிரதேசத்தில் உள்ள கரப்பளை பகுதியில் நேற்று முன்தினம் யானையின் தாக்குதல் காரணமாக ஓய்வுபெற்ற புகையிரத நிலைய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரப்பளையில் இருந்து பள்ளவில்லு பகுதிக்கு துவிச்சக்கர வண்டியில் மீன்வாங்க சென்றபோது யானையின் தாக்குதலுக்குள்ளாகி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கரப்பளை பிரதேசத்தினை சேர்ந்த சோமசுந்தரம் சண்முகநாதன் (69வயது) என பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வெலிக்கந்தை பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு அந்நிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் யானைகள் காடுகள் இன்றி கிராமத்துக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள பகுதிகளில் யானை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மண்சரிவினால் மலையகத்துக்கான புகையிரத சேவை தடங்கல்
உடரட்ட மெனிகே புகையிரத எஞ்சின் மீது மண்சரிந்து விழுந்த காரணத்தால் மலையகத்துக்கான ரயில்சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு பதுளையில் எல்ல, தெமோதர பிரதேசத்துக்கு இடையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனினும் இந்தச் சம்பவத்தில் புகையிரதம் மற்றும் பயணிகளுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை.
எனினும் புகையிரதப் பாதையில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டிருப்பதால் மலையகத்துக்கான ரயில் தற்போது பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்புக்கு புறப்படும் ரயில்களும் பண்டாரவளையிலிருந்து புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புகையிரதப் பாதையில் விழுந்துள்ள மண்சரிவை அகற்றும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேசிய பேரிடர் முகாமைத்துவ மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
பாரிய மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடை
கடும் மழை காரணமாக வலப்பனை - இராகலை பிரதான வீதியில் வத்துமுல்ல பகுதியில் 29.10.2014 அன்று காலை 7.00 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாகவும் இதனால் வாகன சாரதிகள் மாற்றுவழியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மண்சரிவை அகற்ற நடவடிக்கை எடுத்திருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிரி தெரிவித்தார்.
இதே வேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி,நுவரெலியா,பதுளை ஆகிய மாவட்டங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் பல மண்சரிவுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பொரல்லையில் ஆணின் சடலம் மீட்பு
கொழும்பு பொரல்லை பிரதேசத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லேக் ட்ரைவ் வீதிக்கு அருகில் இந்த சடலம் காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் பிச்சைக்காராக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலத்தில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் சடலம் மீட்கப்பட்டு கொழும்பு பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சம்பவம் குறித்து பொரல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXlxz.html
Geen opmerkingen:
Een reactie posten