தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 oktober 2014

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதி கைது

ரணிலின் வெற்றிக்காக சஜித் களத்தில்- எதிரணியில் இணைய பின்வாங்கும் அமைச்சர்கள்
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 07:29.22 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் தலைவரான அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்த எந்த அர்ப்பணிப்புகளையும் மேற்கொள்ள தயார் எனவும் அந்த கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட்பார்க்கில் நேற்று நடைபெற்ற கட்சியின் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்த அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரணில் ஜனாதிபதி வேட்பாளர்: எதிரணியில் இணைய பின்வாங்கும் அமைச்சர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் தமது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
மகிந்த அரசாங்கத்தை கவிழ்த்து ஏன் எதிர்க்கட்சியின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சியிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனை தவிர ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பொது வேட்பாளர் தேர்தலில் நிறுத்தப்படாததும் ஒரு காரணம்.
இப்படியான நிலைமையில், கட்சி மாறி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தற்கொலை செய்து கொள்வதற்கு ஈடானது என அந்த அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் ஜனாதிபதி வேட்பாளர் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரது நிலைப்பாடாக இருந்து வந்தது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடாது போனால், சஜின் பிரேமதாச உள்ளிட்ட குழுவினர் மீண்டும் கட்சிக்குள் பிளவுகளை உண்டு பண்ணக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், பொது வேட்பாளரை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி இணங்க மறுத்தால் ஏனைய எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் தலைவராக ரணில் விக்ரமசிங்க இருக்க வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் செயற்பட வைப்பது போன்ற முக்கிய விடயங்களை மேற்கொள்ள நம்பிக்கையான ஒருவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என ஏனைய எதிர்க்கட்சிகள் யோசனை முன்வைத்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARdKXko1.html
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதி கைது
[ புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2014, 07:55.06 AM GMT ]
கொள்ளைச் சம்பவம் தொடர்பாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தமண்கடுவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 4 பேர் நேற்று பொலன்நறுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பொலன்நறுவை குருப்பு சந்தி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள், நேற்று முன்தினம் இரவு நெல் விற்பனை சபையின் அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் பிரவேசித்து அவரை அச்சுறுத்தி பின்னர், வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபா ரொக்கம், 8 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில் ஆளும் கட்சியின் பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXko2.html

Geen opmerkingen:

Een reactie posten