தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 oktober 2014

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அப்பாவிகள்! நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தியா!

பாகிஸ்தானியரின் விரலைக் கடித்த இலங்கையர்
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 04:26.38 PM GMT ]
இலங்கையின் 29 வயது பணியாளர் ஒருவர் தமது அறை நண்பரை கடித்தமையால் அவர் விரல் ஆறு வீத அங்கவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூன் 28ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது குற்றம் சுமத்தப்பட்டவர், மது அருந்திய நிலையில் தமது அறை நண்பரான பாகிஸ்தான் நாட்டு சாரதியுடன் முரண்பட்டுள்ளார்.
இதன்போதே பாகிஸ்தானியரின் சுட்டு விரலை இலங்கையர் கடித்துள்ளார்.
இந்தநிலையில் பாகிஸ்தானிய சாரதியின் சுட்டுவிரல் ஆறுவீத அங்கவீனத்துக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குற்றச்சாட்டை இலங்கையர் ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் இலங்கையருக்கான தீர்ப்பு எதிர்வரும் 24ஆம் திகதியன்று துபாய் நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkw0.html


தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அப்பாவிகள்! நடவடிக்கை எடுக்கப்படும்: இந்தியா
[ வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2014, 04:29.37 PM GMT ]
ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு போதைவஸ்துவை கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த 5 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் ஐந்து மீனவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்யத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த ஐந்து மீனவர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவை பொறுத்தவரை அவர்கள் ஐந்து பேரும் குற்றமற்ற அப்பாவிகளாகும். இது இந்திய தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் இலங்கை நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ள அவர்களை நீதியின் அடிப்படையில் அனுகி அவர்களை விடுதலை செய்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக அக்பருதீன் தெரிவித்தார்.
அப்பாவித் தமிழக மீனவர்களைத் தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசின் சென்னைத் தூதரகத்தை மூடவேண்டும்!- பெ.மணியரசன்
தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.
சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களை மட்டுமின்றி தமிழகத் தமிழர்களையும் இனப்பகையோடுதான் பார்க்கிறது.
சிங்கள அரசின் தமிழின அழிப்பு என்பது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பொதுவானது என்பதையே தமிழக மீனவர்களை இதுவரை சுட்டும் அடித்தும் கொன்ற நிகழ்வுகளும் இப்போது தூக்கிலிட்டுக் கொல்ல முயலும் நடவடிக்கையும் உறுதி செய்கின்றன.
தமிழினத்தை அழித்ததற்காக ராஜபக்சவை இந்திய அரசு வரவழைத்து பாராட்டியது. அண்மையில் சிங்கள கப்பற்படைத் தளபதியை டில்லிக்கு வரவழைத்து படை அணிவகுப்பு மரியாதை செய்து பாராட்டியது தொடர்ந்து சிங்கள படையினருக்கு இந்தியா பயிற்சி தந்து வருகிறது.
ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று பா.ச.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய அரசின் இப்படிப்பட்ட தமிழினப்பகை நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்ற சிங்கள இனவெறி அரசு இன வெறிக்கு பலியாகியுள்ள இலங்கை நீதித்துறை மூலம் ஐந்து தமிழகத் தமிழர்களை தூக்கிலிடத் துடிக்கிறது.
இந்திய அரசு ஏழரைக் கோடி தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் என்று கருதினால் இலங்கையோடு உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும்.
இந்திய அரசு அவ்வாறு செய்யவில்லையெனில் தமிழ் மக்கள் அறச்சீற்றம் கொண்டு எழுச்சிப் பெற்று சென்னையில் உள்ள சிங்களத் தூதரகத்தை மூடவேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszAQUKXkw1.html

Geen opmerkingen:

Een reactie posten