தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க பாலியல் கப்பம்: விசாரணை ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று வெற்றி! ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 03:46.05 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று ரீதியான வெற்றியை பெறமுடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு ஹைட்பாக் கோனரில் இன்று மாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றின்போது கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.
தமது கட்சி மலையுச்சிக்கு செல்வதற்கு இன்னும் சில தூரமே உள்ளதாக இதன்போது அவர் குறிப்பிட்டார்.
தாம் லண்டன் சென்றிருந்த போது விடுதலைப்புலிகள் தரப்பினர் எவரையும் சந்திக்கவில்லை என்றும் ரணில் கூறினார்.
இதன்போது கருத்துரைத்த கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சியின் அமைப்பாளர்கள் உதவியின்றி கட்சியினால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி வரலாற்று வெற்றியை பெறும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
யார் துரோகி யார் வீரன் என்ற உண்மை வெளிச்சமாகியுள்ளது- ரணில்
யார் துரோகி யார் வீரன் என்ற உண்மை வெளிச்சமாகியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சேவையாற்றவில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றியீட்டும் நோக்கில் துரோகி, வீரன் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
போரை வென்றெடுக்க கடுமையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சரத் பொன்சேகாவின் வாக்குரிமை முடக்கப்பட்டுள்ளது.
தலதா மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தி, பௌத்த பிக்குகளை படுகொலை செய்த நபர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டின் துரோகி யார், வீரன் யார் என்பது வெளிச்சமாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே துரோகம் இழைத்துள்ளார் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் மைதானத்தில் 12000 கீழ் மட்ட கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போது ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கரு ஜயசூரிய
பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதனை அரசாங்கம் இப்போதாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் பிரச்சினைகளை அரசாங்கம் பொறுப்புடன் நோக்கி தீர்வு வழங்க வேண்டும்.
அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயக நெறிமுறைகைளில் ஆட்சி நடத்தப்படும் நாடொன்றிற்கு பொருத்தமானதல்ல.
ஜனநாயக நாடுகளில் அமைதியான வழிமுறைகளில் போராட்டங்களை நடாத்த அனுமதியுண்டு.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து இந்த உரிமையை பறிக்க எவராலும் முடியாது.
சில மாணவர்களுக்கான வகுப்புத்தடையை நீக்குதல், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கான தடையை நீக்குதல், பல்கலைக்கழகத்திற்குள் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு மனித உரிமை ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் கோரிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதி என பிரதேச மக்களும் பொலிஸாரும் அடையாளம் கண்டுள்ளனர்.
எனவே தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென கரு ஜயசூரிய ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv1.html
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பர் 19ம் திகதி வெளியிடப்படும்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 03:52.00 PM GMT ]
இலங்கையின் ஏழாவதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் போட்டியிடவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வெளியிடப்படும்.
அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் ஜனவரி முதல் வாரத்தில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 69வது பிறந்ததினத்துக்கு முதல்நாளே தேர்தல் குறித்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளது.
இது மஹிந்த ராஜபக்ச முதல் தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்றதன் 9 வருட பூர்த்தியன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv2.html
இலங்கை- சீனாவுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை! ஜூனில் கையெழுத்து (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 04:04.06 PM GMT ]
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கையெழுத்தாகவுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் எஸ் ஆர் ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த உடன்படிக்கை 2014ஆம் ஆண்டு இறுதியில் கையெழுத்தாகயிருந்தது. எனினும் சில தடைகளினால் அது பிற்போடப்பட்டு வந்தது.
இலங்கையில் சீனா 2005ஆம் ஆண்டில் 28.39 மில்லியன் டொலர்களை முதலிட்டது.
2013ஆம் ஆண்டில் அந்த முதலீடு 121.63 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது.
இந்தநிலையிலேயே இரண்டு நாடுகளும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ளவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் தாதியர் பணிப் புறக்கணிப்பு
நாளை 29ம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரசாங்க தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தமது மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் இந்தப்போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரியவின் குற்றச்சாட்டின்படி 12வருடங்கள் சேவையாற்றியும் 24 தாதியருக்கு கிழக்கு மாகாணசபை, சேவை இடமாற்றத்தை வழங்கவில்லை.
அத்துடன் கிழக்கு மாகாணசபை உரிய இடமாற்றங்களை மேற்கொள்வதில் தோல்வியும் கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்
ஒரு வாரத்துக்குள் விடுவிக்கப்படுவர் என்ற உறுதிமொழியை அடுத்து யாழ்ப்பாண சிறையில் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த 24 தமிழக மீனவர்கள் அதனை கைவிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்று தமது போராட்டத்தை ஆரம்பித்தனர். தாம், தமது படகுகளுடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
இதேவேளை இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலை அடுத்து நேற்று கடலுக்கு சென்ற 631 படகுகள்  தொழில் செய்யாமலேயே கரைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 24 வியாபாரிகளுக்கு தண்டம் விதிப்பு
மட்டக்களப்பில் வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 24 பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிவான் நீதிமன்றம் தலா இரண்டாயிரம் ரூபா தண்டப் பணம் விதித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நேற்று இந்த திடீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மது வரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பண்டார மற்றும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மது வரித்திணைக்கள அத்தியட்சர் என்.சோதிநாதன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மது வரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் வர்த்தக நிலையங்களில் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நேற்று காலை தொடக்கம் பிற்பகல் நான்கு மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
குறித்த வியாபாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு என்ற காரணத்தினால் நீதிபதியினால் எச்சரிக்கை செய்யப்பட்டு தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
21வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று ஏனைய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv3.html
சிலோன் டீயின் நன்மதிப்பைக் கெடுக்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 04:13.30 PM GMT ]
சர்வதேச மட்டத்தில் இலங்கைத் தேயிலையின் நன்மதிப்பைக் கெடுக்கும் காரியங்களில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஈடுபட்டிருப்பதாக சிங்கள இணையத்தள செய்தியொன்று தெரிவிக்கின்றது. 
இது தொடர்பாக அந்தச் செய்தியில் மேலும் தெரியவருவதாவது,
பாகிஸ்தான், இந்தியா மற்றும் வியட்னாம் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற தேயிலையைக் கலந்து “சிலோன் டீ” என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மோசடியொன்று நடைபெறுகின்றது.
இதன் பின்னணியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ செயற்படுவதாகவும், இதன் காரணமாக வெளிநாடுகளில் சிலோன் டீ என்றழைக்கப்படும் இலங்கைத் தேயிலையின் மதிப்பு குறைந்துள்ளதாகவும் தெரிகின்றது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்த மோசடி வர்த்தகம் தொடர்பில் சிறு தேயிலைத் தோட்ட வர்த்தகர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் லால் பிரேமானந்த பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய மலைநாடு அல்லாத ஏனைய பிரதேசங்களில் பயிரிடப்படும் தரமற்ற தேயிலை மற்றும் இந்தியா, பாகிஸ்தான், வியட்னாம் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தருவிக்கப்படும் தரமற்ற தேயிலை என்பன கண்டி, நுவரெலியா போன்ற பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அங்கு வைத்து இலங்கையின் தரமான தேயிலையுடன் கலப்படம் செய்யப்படுகின்றது. பின்னர் “சிலோன் டீ” என்ற வர்த்தகப் பெயருடன் அவை பொதி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
“சிலோன் டீ“ சர்வதேச தேயிலை சந்தையில் நான்காம் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அதேநேரம், இலங்கையின் தரமான கறுப்புத் தேயிலை சர்வதேச மட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.
எனினும் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மோசடி வியாபாரம் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைத் தேயிலையின் மதிப்பு குறைந்துள்ளது. இது எதிர்காலத்தில் தேயிலைக்கான வெளிநாட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் லால் பிரேமானந்த குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கு முன்னரும் பல்வேறு மோசடி வர்த்தக நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிருந்தமை தொடர்பிலும் லால் பிரேமானந்த சுட்டிக்காட்டுகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv4.html
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க பாலியல் கப்பம்: விசாரணை ஆரம்பம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 04:26.35 PM GMT ]
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் கப்பம் பெறப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ள.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முகாமையும் தெரிவாளர்களும் வீராங்கனைகள் தேசிய அணிக்கு தெரிவாகவும், தமது இடங்களை தக்க வைத்துக் கொள்ளவும் பாலியல் கப்பம் பெற்றுக் கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியின.
இலங்கையின் உள்ளூர் பத்திரிகை ஒன்று இந்த தகவலை வெளியிட்டது. இதனையடுத்தே குறித்த குற்றச்சாட்டை விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு தமது விசாரணையை நாளை மறுநாள் வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளது.
இதன்போது தேசிய தெரிவாளர்கள், முகாமையாளர், பயிற்றுவிப்பாளர் மற்றும் அணியின் அங்கத்தவர்கள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlv5.html

Geen opmerkingen:

Een reactie posten