தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 oktober 2014

கோயிலுடன் மண்ணில் புதையுண்ட குடியிருப்புக்கள்! பார்வையிட்டார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்!



மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன.
7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும், 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும், 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும், 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும், 11ஆம் இலக்க லயனில் 6வீடுகளும், 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக தகல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், இரண்டு கடைகள், மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு,சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.
இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட 66 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால், மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை தேடும் பணியில் முப்படையினரும் இலங்கை விமானப்படையின் விசேட ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
அத்துடன், பதுளை, பண்டாரவளை உள்ளிட்ட பிரதான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர், மருத்துவ குழு மற்றும் நோய்காவு வண்டிகளும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அதில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு பணித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில், விமானப்படைக்கு சொந்தமான விசேட ஹெலிகெப்டர் மூலமாக ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அரவிந்த குமாரும் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற அனா்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியும் வழங்கினார்.
பாதிக்கப்பட்ட மக்களின் கருத்து……
இன்று காலை ஏழு மணியளவில் திடீரென பாரிய சத்தமொன்று கேட்டது. அதுவொரு வித்தியாசமான சத்தம். நான் ஓடினேன். எந்தப்பக்கம் என்று தெரியாமல் ஓடினேன்.
அப்படி ஓடும்போது மலை சரிந்து விழுந்தது. நான் அதில் புதையுண்டேன். என்னைக் காப்பாறிய சிலர் வைத்தியசாலையில் அனுமதித்தனர்'என்று கொஸ்லந்தை, மீரியபெத்தை மண்சரிவில் சிக்குண்டு உயிர்பிழைத்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்டத் தொழிலாளியான ராதா (34 வயது) கூறுகையில், 'திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் எனது இடுப்புப் பகுதி வரை மண் மூடிக்கொண்டது. எனது நான்கு பிள்ளைகளும் வேறு பக்கமொன்றில் இருந்தனர். தந்தையும் தாயும் கூட இருந்தனர். அவர்கள் தொடர்பில் தகவல் இல்லை. அவர்கள் புதையுண்டனரா என்பது பற்றி தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
புதையுண்டு மீட்கப்பட்டவர்களை லொறியொன்றில் வைத்தியசாலைக்கு ஏற்றி வந்த சாரதி இது தொடர்பில் கூறுகையில், வீதியொன்று தென்படவே இல்லை. மிகவும் கடினமான முறையில் மீட்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வந்தேன்.
சுமார் 128 லயன் அறைகளில் ஒன்றுகூட தற்போது தென்படுவதில்லை. கோயிலையும் காணவில்லை. அந்த லயன் அறைகளில் 300 அல்லது 400பேர் இருந்திருக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARdKXkry.html

Geen opmerkingen:

Een reactie posten