இலங்கையில் தூக்கு தண்டனை: 5 இந்திய மீனவர்களும் இவர்கள் தான் : அதிர்கிறது ராமேஸ்வரம் !
தங்கச்சிமடத்தில் 500 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டுவிட்டன. இதனால் ராமேஸ்வரம் வரும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. ராமேஸ்வரத்தில் சென்னை எழும்பூர், கன்னியாகுமரி, மதுரை செல்லக் கூடிய 4 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முற்று முழுதாக ராமேஸ்வரத்துக்கான போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் தமிழக மீனவர்களைப் பிடித்தது மட்டுமல்லாது, அவர்கள் மீதுபொய்வழக்கையும் போட்டு மரணதண்டவை வழங்கியுள்ளது இலங்கை நீதிமன்றம். மோடியின் அசட்டையீனம், தமிழக அரசு ஜெயலலிதாவின் வழக்கை பற்றி சதா சிந்திப்பதும், சுப்பிர மணிய சுவாமி என்னும் நாசகாரனின் வேலைகள் தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
வறிய மீனவர்களை இலங்கை இராணுவம் அடிக்கடி பிடித்து சுட்டுக்கொன்றது. அவர்களை அடித்து உதைத்து வலைகளைப் பிடுங்கியும், படகுகளை சேதப்படுத்தியும் வந்தது. இதேவேளை அவர்கள் படகுகளை கைப்பற்றுங்கள் என்று டெல்லியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி இலங்கை அரசுக்கு மந்திர ஆலோசனை வழங்கியும் உள்ளார். அதனை ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தியும் வருகிறார். இன் நிலையில் இலங்கையில் வைத்து இந்திய மீனவர்களை தூக்கிலிடவும் தற்போது இலங்கை நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. கொலை, கொள்ளை, பாரிய ஆட்கடத்தல் வேலைகளில் ஈடுபட்ட நபர்களுக்கும். யாழில் உள்ள அவா குழுவின் தலைவனுக்கும் ஜாமீன் கொடுக்கும் நீதிமன்றம், கஞ்சா கடத்தினார்கள் என்று சொல்லப்படும் மீனவர்களுக்கு தூக்குதண்டனை கொடுத்துள்ளது மிகவும் விநோதமாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1343.html
அந்த முகாமிலிருந்து வரும் சத்தங்கள் காதையடைக்கின்றன.. பரமேஸ்வரி சொல்லும் விடையம் !
அந்த முகாமிலிருந்து வரும் சத்தங்கள் காதையடைக்கின்றன, ஆனாலும் அந்த சத்தத்தின் மத்தியிலும் பரமேஸ்வரி அதிர்ச்சியால் உறைந்து போய் அமர்ந்திருக்கின்றார்- இலங்கையின் மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாக பதியப்பட்டுவிட்ட அந்த மண்சரிவில் ஒரு நொடிக்குள் தனது குடும்பத்தில் நால்வரை இழந்தவர் பரமேஸ்வரி.... ஆனால் அந்த அனர்த்தம் எவ்வாறு நடைபெற்றது என்பதை என்பதை விவரிக்க தொடங்க அவரது மௌனம் கலைகிறது, செவ்வாய்கிழமை காலை எப்படி மலைகளின் மேலிருந்த மரங்கள் அசுரத்தனமாக ஆடத்தொடங்கின என்பதை அவர் தெரிவித்தார்-
''நான் எனது குடும்பத்தினரை பார்த்து கத்தினேன், வெளியே ஓடும்படி கதறினேன்,உள்ளே ஓடி எனது பேரக்குழந்தையை கையிலெடுத்தேன், நாங்கள் வெளியே வந்த அந்த தருணத்தில் மரங்களும், பாறைகளும், எங்களை நோக்கி வந்தன. குழந்தை எனது கையை பிடித்துக் கொண்டிருந்தது எனினும் என்னால் அதனை பிடித்துக்கொண்டிருக்க முடியவில்லை, மண் குழந்தையை இழுத்துக்கொண்டு போய்விட்டது, என்னுடைய வீட்டுடன் சேர்ந்து உள்ளேயிருந்த நால்வரும் புதையுண்டுவிட்டனர்'' என தெரிவித்துவிட்டு அவர் மீண்டும் விம்ம தொடங்கினார்....
தனது குடும்பத்தை சேர்ந்த 11 பேரில் நான்கு பேரை பரமேஸ்வரி இழந்துள்ளார், அவர் அணிந்துள்ள அந்த பச்சை சேலையை தவிர வேறு எந்த உடமைகளும் மிஞ்சவில்லை, தனது வீட்டிற்க்கு அருகிலுள்ள- கணேசா மகா வித்தியாலயத்தில் அவர் தங்கியுள்ளார்- அது தான் அவருக்கு தற்போதுள்ள ஒரேயோரு தங்குமிடம். அவருக்கு அருகில் சரோஜா அமர்ந்திருக்கிறார்- அவர் கொழும்பில் ஹோமாஹவில் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்- அவரது நோயாளி கணவர்- மகள்- மகளின் கணவர் என அனைவரும் மண்சரிவில் பலியாகிவிட்டனர். நான் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன், ஆனால் முடியவில்லை அதன் பின்னரே நடந்ததை அறிந்தேன் என கதருகின்றார் அவர்.
சுமார் 800 ற்க்கு மேற்பட்ட மக்கள் தங்கள் குடும்பத்தவர்களையும், உடமைகளையும் இழந்துள்ளனர். இவர்களில் 75 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் தற்போது இரு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வழமை போல் இந்த பிள்ளைகள் அன்று காலையிலேயே பாடசாலைக்கு புறப்பட்டுள்ளனர், பாடசாலையில் இருந்த வேளையே 7.30 மணிக்கு நிகழ்ந்த மண்சரிவு குறித்து இவர்கள் அறிந்தனர். ஒரு சிலி நிமிடங்களுக்குள் அவர்களது முழுக் குடும்பங்களையும் இயற்கை காவுகொண்டுள்ளது. திரும்பி வந்த போது அவர்களின் வீடுகள் இருந்த இடங்களையே காணவில்லை.
யோகேஸ்வரியின் கதை மிகவும் பரிதாபமானது- அவர் அந்தப்குதியை சேர்ந்தவர் இல்லை –ஆனால் அந்த வழியூடாகவே அவர் தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வார்- இவரது 3 பிள்ளைகளில் 6 வயது மகளை மண் அடித்துச் சென்றுவிட்டது. அரசாங்கம் ஒரு கிராமத்திற்க்கு மாத்திரம் எச்சரிக்கை விடுத்தால் போதாது –அவர்கள் முழு கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும், எங்களுக்கு தெரியாது- நாங்கள் அவர்களை பாடசாலைக்கு அனுப்பினோம்- ஏன் அவர்கள் எங்களை எச்சரிக்கவில்லை என கதறினார் அவர்.... மகிந்தர் தனது தேர்தல் வேலைகளைப் பார்பாரா இல்லை எச்சரிக்கை விடுப்பாரா ?
இந்த 75 அனாதரவான சிறுவர் சிறுமியரை புலம்பெயர் தமிழர்கள் கைவிட்டுவிடக்கூடாது ! உடனே ஆதரவுக் கரங்களை நீட்ட புலம்பெயர் அமைப்புகள் செயல்படவேண்டும் !
http://www.athirvu.com/newsdetail/1344.html
Geen opmerkingen:
Een reactie posten