தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 oktober 2014

தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்: பா.கஜதீபன்

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 06:17.09 AM GMT ]
பிரித்தானியாவில், இலங்கையைச் சேர்ந்த புகலிடக்  கோரிக்கையாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து சென்ற பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டுக்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
43 வயதான ஜெயரட்னம் கந்தையா என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு இலண்டனுக்குச் சென்று 14 வருடங்கள் ஆகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlt2.html


தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்: பா.கஜதீபன்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2014, 06:15.42 AM GMT ]
ஓர் இனத்தின் தனித்துவத்தையும் வரலாற்றையும் பாதுகாப்பதின் மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும், ஓர் இனத்தை அழிக்க வேண்டுமாயின் அவ்வினத்தின் அறிவுக் களஞ்சியங்களை முதலில் அழிக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கபட திட்டத்தினாலேயே 1981ஆம் ஆண்டு நமது அறிவு களஞ்சியமாக திகழ்ந்த யாழ் நூலகத்தை தீயிட்டு கொழுத்தினார்கள் மேலும் எஞ்சிய அறிவுக் களஞ்சியங்களை அழிக்க முயன்று வருகின்றார்கள் இவ்வாறு சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற தேசிய வாசிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவற்றை தடுத்து நமது வரலாற்று சின்னங்களையும் ஏனைய முக்கிய ஆவணங்களையும் உரிய முறையில் ஆவனப்படுத்தி பாதுகாக்கவேண்டும். இக்கல்லூரியின் ஆவணங்களை நமது முன்னோர்கள் ஆவணப்படுத்தியதன் காரணமாகவே இப்பாடசாலையின் பெருமையை அறிய முடிகின்றது.
அதுபோலவே நமது இனத்தின் வரலாற்று பெருமைகளை நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அர்ப்பணிக்க வேண்டும்.  இந்நிகழ்வில் இராம ஒளி நூலையும் வெளியிட்டு வைத்தார். அத்தோடு மாணவிகளிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszARcKXlt1.html

Geen opmerkingen:

Een reactie posten